
எப்படி
இந்த நிலையில் வரும் ஏலத்தில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களுக்கு குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. ராபின் உத்தப்பாவை அணியில் எடுத்தாலும் சில இளம் வீரர்களுக்கும் சிஎஸ்கே குறி வைக்கும். முக்கியமான வெளிநாட்டை சேர்ந்த இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.

சிஎஸ்கே
அதன்படி ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியில் தற்போது கலக்கி வரும் இளம் வீரர் ஒருவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வீரர் மாரன்ஸ் லாபுஸ்ஷேன். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் பிபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

சிறப்பாக ஆடுகிறார்
அதிலும் பிரிஸ்போன் ஹீட் அணிக்காக ஆடி வரும் இவர் ஒவ்வோர் போட்டியிலும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். நேற்று அதிரடியாக ஆடிய இவர் 36 பந்தில் 1 சிக்ஸ், 3 பவுண்டரி அடித்து 48 ரன்கள் எடுத்தார். தொடக்கத்தில் இருந்து ஓவர் அதிரடியாக ஆடும் திறன் கொண்டவராக இருக்கிறார்.

இளம் வீரர்
இவர் மிகவும் இளம் வீரர். இவரை சிஎஸ்கேவில் எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக பலர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மார்னஸ் ஆட உள்ளார். இதனால் சிஎஸ்கே இவரை குறி வைக்க உள்ளது. அணியின்

சிஎஸ்கே எப்படி
சிஎஸ்கேவில் எப்போதும் ஆஸ்திரேலிய ஒப்பனர்கள் சிறப்பாக ஆடுவார்கள். ஹெய்டன் தொடங்கி வாட்சன் வரை சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணியின் ஒப்பனர்கள் உதவி உள்ளனர். இதனால் மார்ன்ஸை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வர தோனி கண்டிப்பாக முயற்சி செய்வார் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications