Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரைத்தான் எதிர்பார்த்தோம்.. தோனி எதிர்பார்த்தபடியே நடக்கிறது.. ஆஸி. வீரர் வருகையால் குஷியில் தோனி!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முக்கியமான ஆஸ்திரேலிய வீரர் ஒருவரை குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு கெட்ட கனவாக அமைந்து இருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெற முடியாமல் சிஎஸ்கே அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இதனால் 2021 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பல முக்கியமான மாற்றங்களை செய்ய சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. ஐபிஎல் மினி ஏலத்தில் முக்கியமான வீரர்களை ஏலம் எடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

முடிவு

முடிவு

ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர்கள், மூத்த வீரர்களை கலந்து கட்டி எடுக்க சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது.இதற்காகவே ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பே டிரேடிங் செய்து ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கியது.

எப்படி

எப்படி

சிஎஸ்கே அணியில் தற்போது வெளிநாட்டு வீரர் ஒருவரை எடுக்க முடியும். வாட்சன் வெளியேறிய காரணத்தால் அவரின் இடத்தில் வெளிநாட்டு வீரர் ஒருவரை எடுக்க முடியும். வாட்சன் இடத்தில் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

தோனி

தோனி

இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் மார்னஸ் லாபுசேஞ்ச் மீது குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்னஸ் லாபுசேஞ்ச் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர். இவர் டெஸ்ட் அணி வீரர் என்றாலும் மிகவும் அதிரடியாக ஆட கூடியவர். பிபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கிறார்.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்த வருட ஐபிஎல் தொடருக்கு இவர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் இந்த வருட ஏலத்தில் இவர் அதிகம் கவனிக்கப்படுவார். சிஎஸ்கே அணி செய்த டீலிங் காரணமாகவே மார்னஸ் லாபுசேஞ்ச் தற்போது ஐபிஎல் தொடருக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்தார் என்று கூறப்படுகிறது.

 பெயர் பதிவு

பெயர் பதிவு

சிஎஸ்கே இவரை கண்டிப்பாக எடுக்கும். இவர் மீது பல நாட்களாக தோனிக்கு ஒரு கண் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஓப்பனிங் செய்வார்கள் என்பதால் கண்டிப்பாக மார்னஸ் லாபுசேஞ்ச் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Saturday, February 6, 2021, 10:00 [IST]
Other articles published on Feb 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+