Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிருஷ்ணப்பா முதல் சேட்டன் வரை..சிஎஸ்கே தட்டி தூக்க போகும் 3 இளம் வீரர்கள்.. ரெடியான மாஸ்டர் பிளான்!

சென்னை: சிஎஸ்கே அணியில் வரும் 2021 ஐபிஎல் சீசனில் மூன்று முக்கியமான பவுலர்கள் ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இன்னும் பல அணிகளுக்கு இடையே தொடர்ந்து டிரேடிங் நடந்து வருகிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் கிருஷ்ணப்ப கவுதம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 2018ல் ராஜஸ்தான் அணியில் அறிமுகம் ஆன இவர் 15 போட்டிகளில் 11 விக்கெட் எடுத்து 126 ரன்கள் எடுத்தார். ஸ்பின் ஆல் ரவுண்டர்களை சிஎஸ்கே விரும்பும் என்பதால் இவரை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது. கடந்த சீசனில் இவர் பஞ்சாப் அணியில் ஆடினார்.

பஞ்சாப்

பஞ்சாப்

ஆனால் பஞ்சாப் அணியில் இவர் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த சீசனில் 9 போட்டிகளில் இவர் 2 விக்கெட் மட்டுமே எடுத்தார். இதனால் இவர் குறைந்த விலையில் ஏலத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணிக்கு கடைசி ஆர்டரில் இவர் ரன் அடிக்க வாய்ப்புள்ளது. சென்னை பிட்சில் இவர் நன்றாக பவுலிங் செய்வார் என்பதால் இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது.

பெங்களூர்

பெங்களூர்

அதேபோல் சிஎஸ்கே அணியில் முன்னாள் பெங்களூர் வீரர் உமேஷ் யாதவ் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூர் அணியில் கடந்த சில வருடங்களாக விளையாடிய வீரர் உமேஷ் யாதவ். இவர் கடந்த சீசனில் சரியாக ஆடவில்லை. சில போட்டிகளில் பெங்களூர் அணியின் தோல்விக்கும் உமேஷ் யாதவ் காரணமாக இருந்தார்.

ரிலீஸ்

ரிலீஸ்

இவர் ஏற்கனவே பெங்களூர் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டதால் இப்போது இவரை டிரேடிங் செய்ய முடியாது. இதனால் சிஎஸ்கே அணி இவரை ஏலத்தின் போது எடுக்க முயலும். அனுபவம் மிக்க வீரர் என்பதால் இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க முயலும் என்கிறார்கள்.

சிஎஸ்கேவில் சேட்டன்

சிஎஸ்கேவில் சேட்டன்

இதுபோக சிஎஸ்கே அணி சேட்டன் சகாரியவை எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். சவுராஷ்டிரா அணிக்காக ஆடி வரும் சேட்டன் தற்போது முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்.இவர் இடதுகை பவுலர். பேட்டிங்கும் நன்றாக செய்ய கூடியவர். இதனால் சிஎஸ்கே அணி இவரை குறைந்த விலையில் எடுக்க முயலும் என்கிறார்கள்.

Story first published: Tuesday, January 26, 2021, 15:42 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+