Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தடைக்கு பின் வந்த "அந்த" மூத்த வீரர்.. அணியில் எடுக்க திட்டமிடும் தோனி.. சிஎஸ்கே சிறப்பான பிளான்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இன்னும் பல அணிகளுக்கு இடையே தொடர்ந்து டிரேடிங் நடந்து வருகிறது.

 சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எடுக்க போகும் வீரர்களை குறித்த விவரங்கள், தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் 2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி எடுக்க வாய்ப்புள்ளது.

யார்?

யார்?

வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் தன்னை சூதாட்ட கும்பல் அணுகியது குறித்து தகவல் தெரிவிக்காத காரணத்தால் தடை பெற்றார் .ஒரு வருடமாக இதனால் இவர் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டரான இவர் இதனால் ஐபிஎல் போட்டிகளிலும் ஆட முடியாமல் போனது.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் தற்போது சர்வதேச போட்டிகளுக்கு திரும்ப வந்துள்ள ஷாகிப் அல் ஹசன் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார். இந்த நிலையில் ஷாகிப் அல் ஹசனை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு ஸ்பின் பவுலர் தேவை.

பேட்டிங்

பேட்டிங்

அதேபோல் மிடில் ஆர்டரில் ஆட கூடிய தரமான பவுலர் தேவை. இதனால் சிஎஸ்கே மேக்ஸ்வெல், ஹசன் இரண்டு பேரில் ஒருவரை அணியில் எடுக்கும் எண்ணத்தில் உள்ளது. இதில் ஹசன் இந்திய பிட்சில் நன்றாக ஆடுவார் என்பதால் அவரை சிஎஸ்கே அணி குறி வைக்கும் என்கிறார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

அதேபோல் ஹசன் உடன் தோனி நெருக்கமானவர். இவர் கேப்டன்சியிலும் நன்றாக ஆதிக்கம் செலுத்த கூடியவர். இதனால் இவரின் அனுபவம் சிஎஸ்கே அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Story first published: Tuesday, February 2, 2021, 17:33 [IST]
Other articles published on Feb 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+