கேரள வீரருக்கு சென்ற அழைப்பு.. யாருக்குமே தெரியாத வயதான வீரரை கொண்டு வரும் சிஎஸ்கே.. மாஸ்டர்பிளான்
சென்னை: சிஎஸ்கே அணியில் கேரளாவை சேர்ந்த ஸ்பின் பவுலர் ஜலாஜ் சக்சேனா இடம்பெற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட வேண்டிய வீரர்களை எல்லா அணிகளும் ரிலீஸ் செய்துவிட்டது.
சிஎஸ்கே அணியில் இருந்தும் கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

ஸ்பின்
சிஎஸ்கே அணியில் தற்போது ஸ்பின் பவுலர்கள் இல்லை. முக்கியமான இரண்டு ஸ்பின் பவுலர்கள் ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா இரண்டு பேருமே ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டனர். இதனால் புதிய இந்திய ஸ்பின் பவுலர்களை ஏலம் எடுக்க வேண்டும்.

யார் வருவார்கள்
தற்போது சிஎஸ்கே அணியில் இருக்கும் ஸ்பின் பவுலர்களில் இம்ரான் தாஹிர், மிட்சல் சாண்ட்னர் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் என்பதால் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இதனால் ஜடேஜா மட்டுமே சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலிங் செயவார். பார்ம் அவுட் காரணமாக கரண் சர்மாவும் வாய்ப்பு பெற மாட்டார்.

புதிய வீரர்
இதனால் சிஎஸ்கே அணியில் கேரளாவை சேர்ந்த ஸ்பின் பவுலர் ஜலாஜ் சக்சேனா இடம்பெற வாய்ப்புள்ளது. இவர் சிறந்த ஆப் ஸ்பின் பவுலர். இவருக்கு 34 வயதாகிறது.

பின்னணி
கேரளா மாநில அணிக்காக ஜலாஜ் சக்சேனாநீண்ட காலமாக ஆடி வருகிறார். கடந்த சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் இவர் 5 போட்டிகளில் ஆடினார். ஆனால் இதிலேயே இவர் 10 விக்கெட் எடுத்தார்.

ஆல் ரவுண்டர்
அதேபோல் இவர் நன்றாக பேட்டிங்கும் செய்வார். ஜடேஜாவிற்கு பிராவோ இறங்குவார். அதற்கு பின் ஜலாஜ் சக்சேனா இறங்கினால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாக இருக்கும். இவரை சிஎஸ்கே அணியில் எடுப்பதற்காக அணி நிர்வாகிகள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications