Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19 வயது.. பலருக்கும் இவரை யார் என்று கூட தெரியாது.. புதிய வீரரை களமிறக்க போகும் சிஎஸ்கே? டிவிஸ்ட்

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிக இளமையான வீரர் ஒருவரை ஓப்பனிங் வீரராக களமிறக்க முயற்சி செய்யும் என்கிறார்கள்.

"யாத்ரா பிரதீப அவ்சார ப்ரப்நோதிஹி".. ஐபிஎல் கோப்பையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த வாசகம் இணையம் முழுக்க பிரபலம். திறமையும் வாய்ப்பும் சந்தித்துக்கொள்ளும் இடம் என்பது இந்த வாசகத்தின் பொருள்.

இந்த ஐபிஎல் மூலம்தான் மிக இளமையான ரிஷாப் பண்ட் தொடங்கி நடராஜன் வரை புகழ் வெளிச்சத்தை அடைந்து இந்திய அணியிலும் வாய்ப்பு பெற்றனர். வெளிநாட்டு வீரர்கள் பலரும் கூட ஐபிஎல் மூலம் அடையாளம் பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

முக்கியமாக நபி, ரஷீத் கான், முஜீப் ஊர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கியமான ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து வந்து ஐபிஎல்லில் ஆடி உள்ளனர். இதன் மூலம் அவர்கள் ஐபிஎல்லில் புதிய அடையாளம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு வீரரும் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற போகிறார்.

யார்

யார்

ஆப்கானிஸ்தானின் டி 20 அணியில் சர்வதேச அளவில் அறிமுகமாகி ஆடி வரும் ரஹ்மானுல்லா குர்பார்ஸ் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். இதுவரை இவர் பத்து சர்வதேச டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். ஆனால் முதல்தர டி 20 போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடி உள்ளார். இவர் ஆடிய சர்வதேச போட்டிகளில் எல்லாம் நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.

 சிறப்பு

சிறப்பு

சர்வதேச டி 20 போட்டிகளில் 142க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இவருக்கு வெறும் 19 வயதுதான் ஆகிறது. இந்த நிலையில் வரும் ஐபிஎல் 2021ல் இவரும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஹ்மானுல்லாவை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே அணிதான் இவரை குறி வைத்து வருகிறது.

வயது

வயது

இவரின் வயது குறைவாக உள்ளது. ரஹ்மானுல்லாவை அணியில் எடுத்துவிட்டு அவருக்கு கொஞ்சம் டிரெயினிங் கொடுத்து சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் இறங்க வைக்கலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இவர் மிகவும் இளம் வீரர் என்பதால் எதிர்காலத்தில் சிஎஸ்கே அணிக்கு பயன்படுவார் என்றும் கூறப்படுகிறது.

மற்ற அணிகள்

மற்ற அணிகள்

இவரை சிஎஸ்கே அணி எடுத்தால் அது மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும். அதே சமயம் ரஹ்மானுல்லாவை ஏலம் எடுக்க பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகளும் முயற்சி செய்யும் என்கிறார்கள். இரண்டு அணியிலும் தற்போது ஓப்பனிங் வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கம்

நீக்கம்

இதனால் ஓப்பனிங் வீரர்களின் இடத்தை நிரப்ப இந்த அணிகள் முயற்சி செய்யும். ஐபிஎல்லில் எப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் நன்றாக ஆடுகிறார்கள். இதனால் இவரும் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக ஆட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, January 25, 2021, 22:12 [IST]
Other articles published on Jan 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+