Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க கூப்பிட்டா என்ன.. நாம ஸ்கெட்ச் போட்டு தூக்கலாம்.. சிஎஸ்கே வலை விரித்த தமிழர்.. தில் முடிவு

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி முக்கியமான இளம் தமிழக வீரர் ஒருவரை குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட வேண்டிய வீரர்களை எல்லா அணிகளும் ரிலீஸ் செய்துவிட்டது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித்தையே அணியில் இருந்து நீக்கிவிட்டு சாம்சனை கேப்டனாக நியமித்துள்ளார். பெங்களூர் அணியில் இருந்து 4 வெளிநாட்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணியில் இருந்தும் கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

ஏலம்

ஏலம்

சிஎஸ்கே அணியில் இளம் வீரர்கள் இந்த சீசனில் ஏலம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி தமிழக வீரர் ஷாருக்கானை இந்த ஏலத்தில் குறி வைக்கும் என்கிறார்கள். பினிஷரான இவரை சிஎஸ்கே அணி ஓப்பனிங் வீரராக களமிறக்க திட்டமிட்டுள்ளது என்று தகவல் வருகிறது.

திட்டம் என்ன

திட்டம் என்ன

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஷாருக்கான் தமிழக அணிக்காக சிறப்பாக ஆடினார். தமிழக அணிக்காக பல போட்டிகளில் இவர்தான் மேட்சை முடித்தார். அதிலும் கடைசியில் களமிறங்கி மிகவும் அதிரடியாக் ஆடி சென்னை அணிக்காக பல முறை ஆட்டத்தை பினிஷ் செய்தார்.

 நாக் அவுட்

நாக் அவுட்

முக்கியமாக நாக் அவுட் போட்டிகளில் ஷாருக்கான் ஆடிய விதம் சிறப்பாக இருந்தது. 10 பந்தில் மேட்ச் மாற்றுவது, பவர் ஹிட்டிங்தான் இவரின் ஸ்பெஷாலிட்டி. இந்த நிலையில் சிஎஸ்கே அணி இவரை கண்டிப்பாக ஏலத்தின் போது கேட்கும் என்கிறார்கள்.

ஏலம்

ஏலம்

அதன்படி ஷாருக்கானை டெஸ்ட் செய்ய ராஜஸ்தான் அணி அழைத்துள்ளது. கொல்கத்தா அணியும் இவரை டெஸ்ட் செய்ய அழைத்துள்ளது. இவரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும் என்று தினேஷ் கார்த்திக்கும் ஹிண்ட் கொடுத்து இருந்தார் .

ஹிண்ட்

ஹிண்ட்

இந்த அணிகள் இவரை குறி வைத்தாலும் சிஎஸ்கே அணியும் இவரை குறி வைக்கும் என்கிறார்கள். சிஎஸ்கே அணி 5 கோடி வரை கொடுத்து இவரை எடுக்க முயற்சிக்கும் என்று கூறுகிறார்கள். இவர் ஏலத்தின் போது அதிகம் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 11:49 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+