
ஐபிஎல்
2021 ஐபிஎல் தொடரில் சென்னையில் போட்டிகள் நடப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது சிஎஸ்கே அணிக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. 2021ல் ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. இதற்காக சிஎஸ்கே தயாராகி வருகிறது.

தேர்தல்
இந்த நிலையில் இதே ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் மேற்கு வங்கம், கேரளாவிலும் இதே சமயத்தில் தேர்தல் நடக்கும். இதனால் இங்கு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சிரமம் என்கிறார்கள்.

எப்படி
சென்னையிலும், கொல்கத்தாவிலும் இதனால் ஐபிஎல் போட்டிகள் நடப்பது கஷ்டம். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரண்டு மாநிலங்களிலும் மேட்ச் நடக்க வாய்ப்பை குறைவு. 2018ம் வருடம் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கவில்லை. காவிரி போராட்டம் காரணமாக சென்னையில் நடக்கவில்லை.

சிக்கல்
அதன்பின் 2020ல் கொரோனா காரணமாக சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கவில்லை. இந்த நிலையில் இந்த வருடமும் சென்னையில் போட்டி நடப்பது சந்தேகம் ஆகியுள்ளது. இந்த போட்டிகள் ஒருவேளை சென்னையில் நடக்கவில்லை என்றால் சிஎஸ்கே அணி பெரிய அளவில் பாதிக்கப்படும்.

வீரர்கள்
வீரர்கள் தேர்வு பெரிய அளவில் பாதிக்கப்படும். ஹோம் கிரவுண்ட் ஆதரவு இல்லாமல் போகும். அதோடு சிஎஸ்கே அணி ஸ்பின் பவுலர்களை நம்பி மட்டுமே களமிறங்க முடியாது. மொத்தமாக இதற்காக பிளானை மாற்ற வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு ஏற்படும்.

ஐபிஎல்
சென்னையை நம்பி மட்டுமே இதனால் சிஎஸ்கே அணி பிளான்களை வகுக்க முடியாது. அனைத்திற்கும் சிஎஸ்கே அணி தயாராக இருக்க வேண்டும். இதனால் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications