Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் இல்லை.. சுந்தரும் போயிட்டாரு.. முக்கிய தமிழக வீரர்களால் தவிக்கும் சிஎஸ்கே..தோனிக்கு சிக்கல்

சிட்னி: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் ஸ்பின் பவுலிங் மிக மோசமாக இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஒவ்வொரு முறையும் ஆதிக்கம் செலுத்த காரணமே சிஎஸ்கேவின் ஸ்பின் பவுலிங்தான். அணியின் ஸ்பின் பவுலிங்தான் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கு உதவி உள்ளது.

அஸ்வின் தொடங்கி ஹர்பஜன் வரை சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஸ்பின் பவுலர்கள் பெரிய அளவில் உதவி உள்ளனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ஸ்பின் பவுலர்கள் பெரிய அளவில் உதவவில்லை. பியூஸ் சாவ்லா, கரண் சர்மா போன்ற வீரர்கள் சரியாக பவுலிங் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது ஹர்பஜன் , பியூஸ் சாவ்லா போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியால் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர்.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

இதனால் சிஎஸ்கே அணியில் தற்போது இம்ரான் தாஹிர், ஜடேஜாவை தவிர ஸ்பின் பவுலர்கள் இல்லை. இந்தியாவை சேர்ந்த ஸ்பின் பவுலர்களை ஏலம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ஆனால் அங்குதான் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முடியவில்லை

முடியவில்லை

ஐபிஎல் தொடரில் இந்த வருடம் எந்த அணியும் பெரிய அளவில் ஸ்பின் பவுலர்களை ரிலீஸ் செய்யவில்லை, குல்தீப் யாதவ், முருகன் அஸ்வின், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் , சாஹல், ராகுல் சாகர் என்று மூத்த ஸ்பின் பவுலர்கள் யாரும் ரிலீஸ் செய்யப்படவில்லை. இது சிஎஸ்கே அணிக்கு சிக்கலாக மாறியுள்ளது.

 சிக்கல்

சிக்கல்

வாஷிங்கடன் சுந்தர், அஸ்வின் போன்ற தமிழக வீரர்கள் அவர்களின் ஐபிஎல் அணியில் சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஆனால் சிஎஸ்கே அணியில் இப்படி நல்ல ஸ்பின் பவுலர்கள் யாரும் இல்லை. மற்ற அணிகளும் முக்கிய ஸ்பின் பவுலர்களை ரிலீஸ் செய்யவில்லை.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

கொல்கத்தா அணி குல்தீப் யாதவை ரிலீஸ் செய்தால் அணியில் எடுக்கலாம் என்று சிஎஸ்கே நினைத்தது. அனால் குல்தீப் யாதவும் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல்லில் ஸ்பின் பவுலர்கள் இல்லாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, January 28, 2021, 12:14 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+