Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலைகீழாகத்தான் குதிப்பேன்.. மீண்டும் குட்டையில் விழும் சிஎஸ்கே..இதெல்லாம் நடந்தா.. அவ்வளவுதான் கதை!

சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் ஏலத்தில் சில மூத்த வீரர்களை குறி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இதற்காக ஐபிஎல் 2021 மினி ஏலத்தில் முக்கியமான வீரர்களை சிஎஸ்கே அணி எடுக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. 1500 வீரர்கள் வரை இந்த ஏலத்திற்காக பெயரை பதிவு செய்துள்ளனர்.

சென்னை

சென்னை

சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் ஏலத்தில் சில மூத்த வீரர்களை குறி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை சிஎஸ்கே அணி மூத்த வீரர்களை குறி வைத்தால் அது அந்த அணிக்கு மேலும் சிக்கலை தரும். இந்த ஐபிஎல் ஏலம் மினி ஏலம் மட்டுமே ஆகும்.

ஏலம்

ஏலம்

இந்த ஏலத்திற்கு பின் 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக ஒரு அணி இணைக்கப்படும். இதனால் ஐபிஎல் தொடரில் 2022க்கு முன் பெரிய ஏலம் நடக்கும். ஆகவே இந்த ஏலத்தில் பெரிய அளவில் அணிகளில் மாற்றம் இருக்காது .

மாற்றம்

மாற்றம்

இதன் காரணமாக மூத்த வீரர்களை வைத்து மேலும் ஒரு சீசன் ஆடும் திட்டத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. அனுபவம் மிகுந்த வீரர்களை வைத்து இன்னொரு சீசன் ஆடலாம் என்று சிஎஸ்கே அணி நினைக்கிறது. இதற்கு ஏற்றபடியே சிஎஸ்கே அணி ஏலம் எடுக்கும் என்கிறார்கள்.

பவுலர்

பவுலர்

ஆரோன் பின்ச், பவான் நெஹி, மேக்ஸ்வெல், உமேஷ் யாதவ் போன்ற வீரர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என்கிறார்கள். ஆம் பார்மை இழந்து கஷ்டப்படும் மூத்த வீரர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் ஒரு படியாகவே சிஎஸ்கேவில் உத்தப்பா கொண்டு வரப்பட்டார்.

கடந்த சீசன்

கடந்த சீசன்

கடந்த சீசனில் மூத்த வீரர்களின் மோசமான ஆட்டம் காரணமாகவே சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் மீண்டும் அதே ரிஸ்க்கை எடுக்க சிஎஸ்கே அணி நினைக்கிறது. இந்த வருடம் கண்டிப்பாக கப் அடிக்க வேண்டும்.

ஆட வைக்கலாம்

ஆட வைக்கலாம்

இதனால் மூத்த வீரர்களை வைத்து ஆடலாம். இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை தயார் செய்ய முடியாது. அதனால் பின்ச், மேக்ஸ்வெல் போன்ற வீரர்களை எடுக்கலாம் என்று சிஎஸ்கே அணி நினைக்கிறது. ஆனால் சிஎஸ்கே அணி இப்படி மூத்த வீரர்களை தேர்வு செய்வது அந்த அன்னிக்கே எதிராக திரும்ப வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, February 11, 2021, 15:59 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+