Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் மட்டும் வந்தா கெத்துதான்.. பொல்லார்டுக்கு இணையாக தோனி இறக்க போகும் "கரீபியன் கை".. மாஸ்டர்!

சென்னை: மேற்கு இந்திய தீவுகள் புதிய வீரராக அறிமுகமாகி கலக்கி வரும் இளம் வீரர் ஒருவரை தோனி குறி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னும் ஒரே வாரத்தில் ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது.

இதனால் எந்தெந்த வீரர்களை எல்லாம் எடுக்கலாம் என்று சிஎஸ்கே உத்தேச லிஸ்ட் ஒன்றை போட்டுள்ளது. பல இளம் வீரர்களை இந்த முறை சிஎஸ்கே குறி வைக்க வாய்ப்புள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் புதிய வீரராக அறிமுகமாகி கலக்கி வரும் இளம் வீரர் ஒருவரை தோனி குறி வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் கைலி மேயர்ஸ். இவர் அந்த அணியில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி ஆடி வருகிறார்.

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் பார்மெட் போட்டிகளில் டி 20 வீரர் போல கைலி மேயர்ஸ் அதிரடியாக ஆடி வருகிறார். வங்கதேச அணிக்கு எதிராக இவர் ஆடிய ஆட்டம் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கைலி மையர்ஸ் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். இதுதான் இவருக்கு முதல் டெஸ்ட் போட்டி ஆகும்.

சிறப்பு

சிறப்பு

இவர் அடித்த ஷாட்கள், கவர் டிரைவ், லாங் ஆப், ஆன் திசைகளில் அடித்த சிக்ஸ் என்று எல்லாமே பார்க்கவே அற்புதமாக இருந்தது. முதல் இன்னிங்சில் கைலி மேயர்ஸ் 40 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 310 பந்துகள் பிடித்த இவர் 7 சிக்ஸ், 20 பவுண்டரி அடித்தார். கடைசிவரை அவுட்டாகாமல் மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிபெற வைத்தார்.

வெற்றி

வெற்றி

இந்த நிலையில் இவர் ஐபிஎல் தொடரிலும் தனது பெயரை ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார். இவரின் பெயர் நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இவரை சிஎஸ்கே அணி குறி வைக்கும் என்கிறார்கள். ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் பொதுவாக ஒரு கரிபியன் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கும். அந்த வகையில் சிஎஸ்கேவில் பிராவோ இருக்கிறார்.

பார்ம்

பார்ம்

இந்த நிலையில் சிஎஸ்கே தனது ஓப்பனிங் வீரராக கைலியை கொண்டு வரும் என்று கூறுகிறார்கள். டேரன் ஸ்மித் ஒரு காலத்தில் சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் வீரராக இருந்தார். அதேபோல் கைலியை சிஎஸ்கே அணி குறி வைக்க போகிறது என்கிறார்கள். இவரை குறைந்த விலையில் சிஎஸ்கே எடுக்கும் என்று கூறப்படுகிறது.

பிராவோ

பிராவோ

பிராவோவிற்கு தற்போது வயதாகிவிட்டது. இதனால் எதிர்காலத்தில் அவருக்கு மாற்றாக கைலி இருப்பார். கைலியை பிராவோதான் பரிந்துரை செய்துள்ளார். மும்பையில் பொல்லார்ட் இருப்பது போல சிஎஸ்கேவில் கைலி இருப்பார் என்று கூறுகிறார்கள்.

Story first published: Friday, February 12, 2021, 22:51 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+