Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் துருப்பு சீட்டு.. ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே எடுத்தது ஏன்.. அம்பலமான பக்கா பிளான்!

சென்னை: யாரும் எதிர்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா எடுக்கப்பட்டது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட வேண்டிய வீரர்களை எல்லா அணிகளும் ரிலீஸ் செய்துவிட்டது.

சிஎஸ்கே அணியில் இருந்தும் கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா எடுக்கப்பட்டு இருக்கிறார். சிஎஸ்கே அணி இளம் வீரர்களை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆச்சர்யமாக ராபின் உத்தப்பாவை டிரேடிங் முறையில் வாங்கி உள்ளது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பல விமர்சனங்களை சந்தித்தது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் சிஎஸ்கே அணி முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்துதான் இவரை களமிறக்கி உள்ளது என்கிறார்கள். சிஎஸ்கே அணியில் இவர் ஸ்பெஷலிஸ்ட் ஆல் ரவுண்டராக செயல்படுவார். அதாவது சிஎஸ்கே அணியில் 4 ஆல் ரவுண்டர் இந்த முறை ஆடுவார்கள்.

திட்டமிடல்

திட்டமிடல்

ஏற்கனவே அணியில் பிராவோ, சாம்கரன், ஜடேஜா உள்ளனர். இந்த நிலையில் ராபின் உத்தப்பா கூடுதலாக ஆடுவார். இவர் ஓப்பனிங் இறங்க மாட்டார் என்கிறார்கள். மாறாக இவர் மிடில் ஆர்டரில் சிஎஸ்கே அணிக்காக ஆட வாய்ப்புள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதன்படி சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர் ஒருவர் ஏலம் எடுக்கப்பட்டு ஓப்பனிங் செய்ய களமிறக்கப்படுவார். ராபின் உத்தப்பா மிடில் ஆர்டரில் ஆடுவார். இவர்கள் இருவர்தான் சிஎஸ்கே அணியில் துருப்பு சீட்டாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

யார்

யார்

மேத்யூ வேட், மார்னஸ் லபுசேன், ஆரோன் பின்ச் போன்ற வீரர்களில் ஒருவரை ஏலம் எடுக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. ஆனால் இவர்கள் ஆடும் அணியில் இறங்குவது சந்தேகம்தான். இதனால் சிஎஸ்கேவில் டு பிளசிஸ், கெய்காவாட் ஓப்பனிங் இறங்குவார்கள். அதன்பின் ரெய்னா, அம்பதி ராயுடு, உத்தப்பா, தோனி, ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷரத்துல் தாக்கூர் அல்லது சாகர் , இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் பிளேயிங் லெவனில் ஆட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Sunday, January 31, 2021, 15:31 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+