Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6 பேரை ரிலீஸ் செய்து.. இப்படி ஒரு சிக்கலில் மாட்டிகிட்டோமே.. புலம்பும் சிஎஸ்கே.. வைக்கப்பட்ட செக்!

சென்னை: சிஎஸ்கே அணியில் தற்போது முக்கியமான ஸ்பின் பவுலர்கள் பலரும் ரிலீஸ் செய்யப்பட்டு விட்டதால் அந்த அணி அதிக அளவில் ஸ்பின் பவுலர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.

அதன்படி கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

 நீக்கப்படாத வீரர்கள்

நீக்கப்படாத வீரர்கள்

கடந்த சீசன் ஐபிஎல்லில் இவர்கள் யாரும் சரியாக ஆடாத நிலையில் இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த 6 பேர் போக சிஎஸ்கேவின் முக்கியமான வீரர்களான சுரேஷ் ரெய்னா, டு பிளசிஸ், பிராவோ, தோனி, ஜடேஜா, சாம் கரன், கெய்க்வாட், என் ஜெகதீசன், கே. எம் ஆசிப், ஹஸல்வுட், கரண் சர்மா, இம்ரான் தாஹிர், மிட்சல் சான்டர், சாய் கிஷோர், அம்பதி ராயுடு, ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர் ஆகியோர் அணியில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஸ்பின்

ஸ்பின்

சிஎஸ்கே அணியில் நீக்கப்பட்டதில் பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஸ்பின் பவுலர்கள். இவர்கள் இருவரும் நீக்கப்பட்ட நிலையில் மீதம் இருக்கும் ஸ்பின் பவுலர்கள் என்று பார்த்தால் அது ஜடேஜா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர் மட்டுமே. இதில் கரண் சர்மா சரியாக ஸ்பின் பவுலிங் செய்வது இல்லை.

மோசம்

மோசம்

மீதம் இருப்பதில் ஜடேஜாவின் ஸ்பின் பவுலிங்கை எப்போதும் நம்பி இருக்க முடியாது. அதேபோல் 40 வயதை கடந்து விட்டதால் இம்ரான் தாஹிரின் ஸ்பின் பவுலிங்கையும் நம்பி இருக்க முடியாது. அதேபோல் இவர் வெளிநாட்டு வீரர் என்பதால் எப்போதும் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூற முடியாது.

ரெய்னா

ரெய்னா

அதோடு இன்னொரு பக்கம் ரெய்னாவும் பெரிய அளவில் பவுலிங் செய்வது இல்லை. சையது முஷ்டாக் கோப்பையிலும் இவரின் பவுலிங் எடுபடவில்லை. இதனால் சிஎஸ்கே அணி இந்தியாவை சேர்ந்த ஸ்பின் பவுலர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வலுவான இளம் ஸ்பின் பவுலர்களை தேர்வு செய்ய வேண்டும்.

சென்னை

சென்னை

சென்னையில் அதிக போட்டிகள் நடக்கும் என்பதால் சென்னை பிட்சில் ஆட கூடிய வகையில் ஸ்பின் வீரர்களை சிஎஸ்கே தேர்வு செய்யவேண்டும். எப்போது சிஎஸ்கே அணிக்கு ஸ்பின் பவுலிங்தான் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. அஸ்வின் தொடங்கி தாஹிர் வரை ஸ்பின் பவுலர்கள்தான் சிஎஸ்கே வெற்றியை தீர்மானித்துள்ளனர்.

மீண்டும்

மீண்டும்

இதனால் சிஎஸ்கே இந்த முறை ஏலத்தில் ஸ்பின் பவுலர்களை நம்பித்தான் களமிறங்கும். போதுமான அளவு பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் ஆல் ரவுண்டர் மற்றும் ஸ்பின் பவுலர்களை சிஎஸ்கே இந்த முறை அதிகம் ஏலம் எடுக்கும். இன்னொரு ஓப்பனிங் வீரரையும் சிஎஸ்கே ஏலம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 26, 2021, 16:07 [IST]
Other articles published on Jan 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+