முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் போட்ட பிராவோ..தமிழக மக்களுக்காக புதிய முயற்சி..காரணம் என்ன
வெஸ்ட் இண்டீஸ்: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ கவலை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்களை இழந்து வருகின்றனர்.
கொரோனா வைரஸானது ஐபிஎல் அணிகளுக்கு உள்ளும் நுழைந்ததால் தொடர் கடந்த 4ம் தேதி முதல் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது.

சிஎஸ்கே பிராவோ
ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக உள்ளவர் பிராவோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலமும், களத்தில் செய்யும் வேடிக்கை செயல்களாலும் தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் ஐபிஎல் தொடர் முடிந்து தற்போது வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில் தமிழக மக்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து
வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோ
அதில் அவர், தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீள மாநில விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.

தடுப்பூசி தான் தீர்வு
வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள். குறிப்பாக, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவைதான் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நம்மால் நமது குடும்பத்தினர்கள் பாதிக்கக்கூடாது. நீங்கள் அனைவரும் சாம்பியன்கள். விரைவில் கொரோனாவிலிருந்து மீள்வீர்கள் எனக்கூறியுள்ளார்.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளம் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,06,861 ஆக அதிகரித்துள்ளது. இதற்காக தமிழக அரசு ஒரு வாரம் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications