Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன விளையாடுறீங்களா.. 8 நாள்தான் இருக்கு.. மீட்டிங்கில் தோனி கப்சிப்.. சிஎஸ்கேவின் மிரட்டல் லிஸ்ட்

சென்னை: 2021 ஐபிஎல் மினி ஏலம் நெருங்கி வரும் நிலையில் சிஎஸ்கே அணி தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக பல திட்டங்களை சிஎஸ்கே அணி வகுத்துள்ளது.

2021 ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்கான மினி ஏலம் சென்னையில் வரும் 18ம் தேதி நடக்க உள்ளது.

ஏற்கனவே ஐபிஎல் அணிகள் தாங்கள் வெளியேற்றும் வீரர்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இதற்காக வெளியிட்டுவிட்டது. சிஎஸ்கே அணியும் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏலம்

ஏலம்

இந்த ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்க வேண்டிய கடுமையான கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆப் கூட செல்லவில்லை. இதனால் பெரிய அளவில் சிஎஸ்கே அணி விமர்சனங்களுக்கு உள்ளானது.

விமர்சனம்

விமர்சனம்

இதன் காரணமாக இந்த முறை நல்ல வீரர்களை தேடி எடுக்க வேண்டும். ஐபிஎல் வரலாற்றில் 13 வருடமாக அதிக ஸ்கோர் அடித்தவர்களில் ஒரு வீரர் ராபின் உத்தப்பா. இவரை சிஎஸ்கே அணி ஏற்கனவே ராஜஸ்தான் அணியிடம் இருந்து டிரேடிங் முறை மூலம் வாங்கிவிட்டது.

டிரேடிங்

டிரேடிங்

இந்த நிலையில் சிஎஸ்கே அணி தற்போது மினி ஏலத்திற்காக தயாராகி வருகிறது. இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்று மீட்டிங் போட்டு ஆலோசனை செய்துள்ளது. முதல் கட்டமாக இதற்காக ஒரு லிஸ்ட் தயார் செய்யப்பட்டு உள்ளது.

லிஸ்ட்

லிஸ்ட்

இந்த லிஸ்டில் பல இளம் வீரர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு லிஸ்ட் விரைவில் சிஎஸ்கே மூலம் தயார் செய்யப்படும். மினி ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே அணி எந்த வீரர்களை எல்லாம் குறி வைக்க வேண்டும் என்ற முடிவிற்கு வரும். இந்த நிலையில் தோனி இந்த மீட்டிங் எதிலும் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

ஆர்வம் இல்லை

ஆர்வம் இல்லை

தோனி தற்போது மும்பையில் விளம்பர ஷூட்டிங் தொடங்கி பல்வேறு விஷயங்களில் மிகவும் பிசியாக இருக்கிறார். இதற்காக மும்பை சென்றுள்ளார் . அதேபோல் விவசாயத்திலும் பிசியாக இருக்கிறார். இதனால் ஏலம் மீது பெரிய கவனம் செலுத்தவில்லை.

பொறுப்பு

பொறுப்பு

இந்த விஷயங்கள் அனைத்தையும் பிளமிங் மற்றும் அணி தேர்வு குழுதான் கவனித்து வருகிறது. மிரட்டலான லிஸ்ட் ஒன்றை சிஎஸ்கே தயாரித்து உள்ளது என்கிறார்கள். இளம் தமிழக வீரர்கள் சிலர் உட்பட சிஎஸ்கே குறி வைக்க போகும் வீரர்களின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

Story first published: Wednesday, February 10, 2021, 9:00 [IST]
Other articles published on Feb 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+