Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘பால்கனி ரூம் புக் பன்னுங்கப்பா’.. அமீரகத்தில் ஐபிஎல் தொடர்... ரெய்னாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ஐபிஎல் தொடர் மீண்டும் அமீரகத்தில் நடைபெறுகிறது என அறிவித்ததில் இருந்து சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா பேச்சு ட்ரெண்டிங்கில் உள்ளது.

Recommended Video

UAEல் IPL தொடர் Suresh Rainaவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்! |Oneindia Tamil

யாரும் எதிர்பார்க்காத வகையில் தடைபட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 31 போட்டிகள் நடைபெறவேண்டியுள்ளது.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் சோகத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளார். ட்விட்டரில் மீண்டும் பழைய போட்டிகளை வைத்து அமீரகம் பிட்ச்-கள் யாருக்கு சாதகமாக அமையும் என ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் கடந்தாண்டு நடந்த நிகழ்வு தான்.

கடந்தாண்டு பிரச்னை

கடந்தாண்டு பிரச்னை

கடந்தாண்டு ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்ற போது சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் துபாய் சென்று அங்கு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது திடீரென சுரேஷ் ரெய்னா ஒரு போட்டியில் கூட விளையாடாமல் திடீரென தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார். இதற்கு முதலில், ரெய்னா பால்கனியுடன் கூடிய அறை கேட்டதாகவும், அது கிடைக்காததால் அணி நிர்வாகத்துடன் பிரச்னை ஏற்பட்டு வெளியேறியதாகவும் கூறப்பட்டது. பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியதாக கூறப்பட்டது.

இணையத்தில் ட்ரோல்

இணையத்தில் ட்ரோல்

இந்நிலையில் இந்தாண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறுவதால், நெட்டிசன்கள் மீண்டும் ரெய்னாவின் பிரச்னையை கையில் எடுத்துள்ளனர். ட்விட்டரில், ரெய்னாவுக்கு பால்கனியுடன் கூடிய அறை கொடுத்துவிடுங்கள், ரெய்னாவுக்கு பால்கனி ஒதுக்கியாச்சா?, சிஎஸ்கே முதலில் ரெய்னாவுக்கு பால்கனி அறையை புக் செய்யுங்கள் என ட்விட்டரில் மீம்களை போட்டு தள்ளுகின்றனர்.

ரெய்னா வருகை

ரெய்னா வருகை

சுரேஷ் ரெய்னா கடந்தாண்டு அணியில் இல்லாததே சிஎஸ்கேவின் சொதப்பலுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. அதே போல அவர் இந்தாண்டு சிஎஸ்கேவில் இணைந்திருப்பது, அணிக்கு பலம் சேர்ந்துள்ளது. இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா 123 ரன்களை விளாசியுள்ளார்.

Story first published: Saturday, May 29, 2021, 19:16 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+