Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு புறக்கணிப்பு.. அவமானம்.. கிடைத்த ஒரே வாய்ப்பில் சம்பவம் செய்த "மாறா".. சிஎஸ்கே நோட் திஸ்!

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கிடைத்த ஒரே வாய்ப்பில் சிறப்பாக ஆடி சித்தார்த் மணிமாறன் கவனம் ஈர்த்துள்ளது .

மிகவும் பரபரப்பாக சென்ற சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் முடிவிற்கு வந்துள்ளது. இந்த தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தமிழ்நாடு அணி சாதித்து உள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 20 ஓவரில் 120 ரன்கள் இந்த நிலையில் தமிழக அணி 18 ஓவரில் 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 வீரர்கள்

வீரர்கள்

இந்த தொடரில் தமிழக அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் வெற்றிக்கு உதவினார். ஹரி நிஷாந்த், அருண் கார்த்திக், ஷாருக்கான், பாபா அபராஜித் , தினேஷ் கார்த்திக் என்று தமிழக வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். தமிழக வீரர்களின் கூட்டு முயற்சியே இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது.

வெற்றி

வெற்றி

இந்த தொடர் முழுக்க தமிழக அணியில் சித்தார்த் மணிமாறனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. சித்தார்த் மணிமாறன் ஸ்பின் பவுலிங் செய்ய கூடியவர். ஐபிஎல் தொடரிலும் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. கொல்கத்தா அணியில் எடுக்கப்பட்ட இவர் தொடர் முழுக்க புறக்கணிக்கப்பட்டார்.

கடைசி வரை

கடைசி வரை

கடைசி வரை வாய்ப்பு கிடைக்காமல் திணறிய இவரை கடைசியில் கொல்கத்தா அணி ரிலீஸ் செய்தது. இந்த நிலையில் சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த சீசனில் மணிமாறன் ஆடிய முதல் போட்டியே நேற்று நடந்த பைனல்ஸ்தான்.

நம்பிக்கை

நம்பிக்கை

இவர் மீது நம்பிக்கை இல்லாமல்தான் நேற்று வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை கூட நேற்று பலர் விமர்சனம் செய்து இருந்தனர். ஆனால் 4 ஓவர் வீசிய மணிமாறன் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். வெறும் 20 ரன்கள் கொடுத்த 4 விக்கெட் எடுத்தார்.

இவருக்கு கிடைத்த வாய்ப்பு

இவருக்கு கிடைத்த வாய்ப்பு

ஒரே ஒரு வாய்ப்புதான் இவருக்கு கிடைத்தது, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு மாறா எனப்படும் மணிமாறன் அசத்தி இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி இவரை டீமில் எடுத்து மெருகேற்றலாம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லில் இவர் எந்த அணியிலும் இல்லை.

 சிஎஸ்கே ஸ்பின்

சிஎஸ்கே ஸ்பின்

சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலர்கள் குறைவாக உள்ளனர். இதனால் சித்தார்த் மணி மாறனை அணியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி கண்டிப்பாக இவரை இந்த ஏலத்தில் குறி வைக்கும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, February 1, 2021, 10:07 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+