Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானே.. 19 பந்தில் அரைசதம் அடித்து சம்பவம்.. தல நம்பிக்கை வீண் போகல

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடிய ரஹானே 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பைப அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து சிஎஸ்கே அணி தனது இன்னிங்சை தொடங்கிய போது, ஆட்டத்தின் 4வது பந்திலேயே கான்வே டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஒரு விக்கெட் போயிடுச்சே என்று ரசிகர்கக் கலக்கத்தில் இருந்தனர்.

CSK Veteran Rahane scored 19 balls fastest fifty in IPL 2023

அப்போது தான் சிஎஸ்கே அணிக்காக முதல் முறையாக ரஹானே இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினார். ரஹோனேவின் மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் பிசிசிஐ ரஹானேவின் ஊதிய ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.

இந்த நிலையில் தான் ஐபிஎல் மினி ஏலத்தில் தோனி ரஹானேவை நம்பி ஏலத்தில் எடுத்தார். அந்த நம்பிக்கையை இன்று ரஹானே காப்பாற்றினார்.அர்ஷத் கான் வீசிய 4வது ஓவரில் ரஹானே தனது திறமையை காட்டினார். ஒரு சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளை வரிசையாக அடித்த ரஹானே அந்த ஓவரில் மட்டும் 23 ரன்களை சேர்த்தார்.

தொடர்ந்து தனது அதிரடியை ரஹானே காட்ட 19 பந்துகளில் அரைசதம் அடித்து நடப்பு சீசனல் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை ரஹானே பெற்றார். இதனால் சிஎஸ்கே பவர்பிளேவில் 68 ரன்களை சேர்த்தது. 27 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும்.

Story first published: Saturday, April 8, 2023, 22:27 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+