Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை Vs மும்பை.. முதல் ஆட்டத்தில் ஆடுவது யார் யார்?

Recommended Video

முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பீல்டிங்

சென்னை: ஐபிஎல் சீசன் 11 முதல் ஆட்டத்தில் விளையாடும் 11 பேர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அறிவித்துள்ளன.

ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.

CSK Vs MI match started in the IPL opener

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்புவதால், இந்த சீசன் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாகலமாக நடந்த துவக்க விழாவைத் தொடர்ந்து, இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் மோதுகின்றன.

மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த கோலாகலமான துவக்க விழாவுக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற கேப்டன் டோணி தனது அணியை பீல்டிங்கில் இறக்கியுள்ளார்.

இரு தரப்பு அணிகள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: அம்பட்டி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் டோமி, பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், சாஹர், இம்ரான் தாஹிர், மார்க் வுட்.

மும்பை இந்தியன்ஸ்: எவின் லூயிஸ், இஷான் கிஷண், ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டயா, மயாங்க் மார்கண்டே, போலர்டு, சூர்யகுமார் யாதவ், குருணால் பாண்டயா, மிச்சைல் மெக்லிகான், முஸ்தாபிர் ரஹ்மான், ஜஸ்பிரித் பும்ரா.

Story first published: Saturday, April 7, 2018, 20:11 [IST]
Other articles published on Apr 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+