Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனல் மேலே பனித்துளியா? 'சனி'த்துளியா? - வெப்பம் கொப்பளிக்கும் CSK vs MI வெதர் ரிப்போர்ட்

துபாய்: சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் முதல் போட்டியின் பிட்ச் மற்றும் வானிலை ரிப்போர்ட் குறித்து இங்கே பார்க்கலாம்.

Recommended Video

IPL 2021: Points Table நிலவரம்! Playoffs Chance யாருக்கு? | OneIndia Tamil

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செம்.19ம் தேதி தொடங்குகிறது.

இதில், முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 துபாயில் 13 போட்டிகள்

துபாயில் 13 போட்டிகள்

இதுவரை 29 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் நடைபெற வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 11ம் தேதியும், 3வது போட்டி அக்டோபர் 15ம் தேதியும் நடைபெறவுள்ளது . இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்து அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் சார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி மீதம் உள்ள 31 போட்டிகளில் 13 போட்டிகள் துபாயிலும், 10 போட்டிகள் சார்ஜாவிலும், 8 போட்டிகள் அபுதாபியிலும் நடைபெறவுள்ளது.

 சிஎஸ்கே அபார ரன் ரேட்

சிஎஸ்கே அபார ரன் ரேட்

இதில், முதல் போட்டியில் சென்னையும், மும்பையும் மோதுகின்றன. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் அந்த அணி நான்காம் இடத்தில் உள்ளது. ரன் ரேட் +0.062. கைவசம் 7 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், பிளே ஆஃப் முன்னேற, குறைந்தபட்சம் 4 போட்டிகளிலாவது அந்த அணி வெற்றிப் பெற்றாக வேண்டும். 5ல் வென்றால் நிச்சயம் பிளே ஆஃப் இடம் உறுதி. தொடரின் முதல் பாதியில், சென்னை அணியை மும்பை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை பொறுத்தவரை, முதல் பாதியில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 போட்டிகளில் வெற்றிப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. நெட் ரன் ரேட் +1.263. முதலிடத்தில் இருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கூட இவ்வளவு ரன் ரேட் கிடையாது. இன்னும் 3 போட்டிகளில் சென்னை வென்றாலே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிடலாம்.

 பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

சென்னை அணியில் காயம் காரணமாக டு பிளசிஸ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. அதேபோல், குவாரண்டைனில் இருக்கும் சாம் கர்ரனும் இப்போட்டியில் விளையாட மாட்டார். எனவே சிஎஸ்கே-வில் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (c & wk), ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், லுங்கி ங்கிடி, ஜே ஹேசில்வுட் ஆகியோர் இடம் பிடிக்கலாம் என்று தெரிகிறது. அதேசமயம், டீம் செலக்ஷனில் பிட்சும் முக்கிய பங்கு வகிக்கிறது.

 வெதர் ரிப்போர்ட்

வெதர் ரிப்போர்ட்

சென்னை vs மும்பை போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தான் நடைபெற உள்ளது. அனல் கொப்பளிக்கும் பெரிய ஸ்டேடியம் இது. பிபிசி அறிக்கையின் படி, போட்டி நடைபெறும் செப்.19ம் தேதி 42 டிகிரி செல்சியல் வெப்பநிலை அங்கு நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்பின்னர்களை ஒப்பிடுகையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த துபாய் பிட்ச் நன்கு ஒத்துழைக்கும் என்று ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அணியில் இணைந்திருப்பது சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம் என்று கூறலாம். ஸோ, அனல் கக்கும் இந்த துபாய் பிட்சில், அதுவும் மும்பை போன்ற பலமான அணிக்கு எதிராக சென்னை அணிக்கு அனல் மேல் பனித்துளியாய் வெற்றி கிடைக்குமா? அல்லது அதே வெப்பம் தோனி ஆர்மிக்கு 'சனி'த்துளியாய் அமையுமா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.

Story first published: Friday, September 17, 2021, 18:30 [IST]
Other articles published on Sep 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+