இவரை எதுக்கு இன்னும் அணியில் வச்சு இருக்கணும்.. மனமே இன்றி சிஎஸ்கே எடுத்த முடிவு.. இவ்வளவு நடந்ததா?
சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி ரெய்னாவை கொஞ்சம் கூட மனமே இன்றி தக்க வைத்ததாக கூறப்படுகிறது.
2021 ஐபிஎல் தொடருக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.
சிஎஸ்கே வீரர்கள் 6 பேர் இதுவரை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அடிபட்ட புலியான சிஎஸ்கே இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

எப்படி
இந்த ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி மொத்தம் 6 வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது . முரளி விஜய், வாட்சன், ஜாதவ் , ஹர்பஜன், பியூஸ் சாவ்லா உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியில் பல புதிய வீரர்கள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் என்ன
ஆனால் சிஎஸ்கே அணி பல முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது. முக்கியமாக சிஎஸ்கே அணி ரெய்னா போன்ற வீரர்களை தக்க வைத்துள்ளது. ஆனால் ரெய்னாவை தக்க வைக்கும் எண்ணம் சிஎஸ்கே அணிக்கு இல்லை என்கிறார்கள். இவருக்கு சிஎஸ்கே 11 கோடி ரூபாய் கொடுக்கிறது.

அதிகம்
இது மிகவும் அதிகமான தொகை என்று சிஎஸ்கே நினைக்கிறது. அதோடு இவர் சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் சரியாக ஆடவில்லை. அதற்கு முன் நடந்த கிரிக்கெட் தொடர் எதிலும் இவர் ஆடவில்லை.

வருடம்
இரண்டு வருடமாக பெரிய அளவில் கிரிக்கெட் ஆடவில்லை. இதன் காரணமாகவே ரெய்னாவை சிஎஸ்கே எடுக்கும் எண்ணத்தில் இல்லை என்கிறார்கள் . அதோடு அவர் மீது அணி நிர்வாகம் வேறு சில காரணங்களுக்காக கோபத்தில் இருந்துள்ளனர்.

கடைசி நேரம்
ஆனால் ரிட்டேஷன் லிஸ்ட் வெளியிடுவதற்கு கடைசி சில நிமிடங்களுக்கு முன்புதான் ரெய்னாவை தக்க வைக்க முடிவு செய்துள்ளனர். தோனி கொடுத்த ஆதரவும், பயிற்சி குழு கொடுத்த ஆதரவும் இந்த முடிவிற்கு காரணம் என்கிறார்கள். கொஞ்சம் கூட மனமே இன்றி சிஎஸ்கே இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications