Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கு முன் நடக்கும் ஏலத்தில் சிஎஸ்கே அணி இளமையான வீரர்களை ஏலம் எடுக்கும் என்று அணியின் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்க உள்ளது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்தில் முக்கியமான வீரர்கள் பலர் ஏலம் விடப்பட வாய்ப்புள்ளது.

இதுவரை ஐபிஎல்லில் இடம்பெறாத வீரர்கள் பலர் இந்த முறை ஏலம் விடப்பட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இதுவரை ஐபிஎல்லில் விளையாடி வந்த பல வீரர்கள் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சீசனில் மூத்த வீரர்கள் மோசமாக ஆடினார்கள். மூத்த வீரர்களின் பார்ம் அவுட் காரணமாக சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லாமல் தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

இதையடுத்து அடுத்த சீசனில் புதிய அணியை உருவாக்குவோம் என்று கேப்டன் தோனி குறிப்பிட்டு இருந்தார். இதனால் சிஎஸ்கே உருவாக்க போகும் புதிய இளமையான அணிக்காக ரசிகர்கள் காத்து இருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி தற்போது ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கி உள்ளது.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

இதன் காரணமாக சிஎஸ்கே அணி மீண்டும் மூத்த வீரர்களை குறி வைக்கிறதோ என்று கேள்வி எழுந்து இருந்தது. சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ராபின் உத்தாப்பாவின் தேர்வு ஒரு அனுபவ ஓப்பனர் வேண்டும், மாற்று வீரர் வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

ராபின் உத்தப்பா மாற்று வீரர் மட்டுமே. மற்ற வீரர்கள் எல்லோரையும் ஏலத்தில்தான் சிஎஸ்கே எடுக்கும். இவர்கள் எல்லோரும் இளமையான வீரர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சிஎஸ்கேவை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், சிஎஸ்கே அணி 6-7 இளம் வீரர்களை வரும் ஏலத்தில் எடுக்கும்

ஏலம்

ஏலம்

இதில் ஒரு வெளிநாட்டு வீரர் மிகவும் இளமையான வீரராக இருப்பார். இவரின் தேர்வு கண்டிப்பாக சர்ப்ரைஸாக இருக்கும். அதேபோல் இந்தியாவில் இளம் வயதிலேயே கலக்கும் பல வீரர்களை சிஎஸ்கே அணி சர்ப்ரைஸாக ஏலம் எடுக்கும் என்று கூறியுள்ளார். இந்த ஏலம் கண்டிப்பாக இந்திய அணிக்கு சர்ப்ரைஸாக இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, January 23, 2021, 16:08 [IST]
Other articles published on Jan 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+