Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனைத்திற்கும் டிக் அடித்த மூத்த வீரர் .. சிஎஸ்கேவிற்குள் வரும் புதிய ஆஸி. ஓப்பனர்.. செம டிவிஸ்ட்!

சென்னை: சிஎஸ்கே அணி ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஆரோன் பின்சை ஏலம் எடுக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.

அதன்படி கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

சிஎஸ்கே அணியில் தற்போது ஓப்பனிங் வீரர் ஒருவர் குறைவாக இருக்கிறார். கடந்த சீசனில் மோசமாக ஆடிய வாட்சன் தொடர் முடிந்த பின் ஓய்வை அறிவித்துவிட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டும்.

இளம் வீரர்

இளம் வீரர்

சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் கடைசியாக களமிறங்கிய ரூத்துராஜ் கெய்காவாட் மிகவும் சிறப்பாக ஆடினார். இவர் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று போட்டியிலும் உதவினார். இவர் இந்த சீசனிலும் சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங் வீரராக இருப்பார்.

யார் வருவார்

யார் வருவார்

இந்த நிலையில் இன்னொரு ஓப்பனிங் வீரர் யார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் சிஎஸ்கே ஆரோன் பின்சை ஏலம் எடுக்கும் என்கிறார்கள். இவர் கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ஆடினார். சுமாராகவே இவரின் ஆட்டம் இருந்தது. ஆனால் இவர் சிறந்த டி 20 வீரர்.

சரியாக ஆடவில்லை

சரியாக ஆடவில்லை

இதனால் இந்த சீசனில் இவர் சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணியில் பொதுவா ஆஸி. ஒப்பனர்கள் நன்றாக ஆடுவார்கள். அதேபோல் இவர் நல்ல அனுபவம் மிக்க வீரர். வயதும் அதிகம் என்பதால் சிஎஸ்கே கண்டிப்பாக இவருக்கு குறி வைக்கும்.

செம திட்டம்

செம திட்டம்

பின்சும், ரூத்துராஜும் இணைந்து சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்க முடியும். இப்படி அனைத்து பாக்சிற்கும் பின்ச் டிக் அடித்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி இவரை குறி வைத்துள்ளது. இவரை ராஜஸ்தான் அணியும் குறி வைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Friday, January 29, 2021, 15:09 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+