Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வருடங்களுக்கு பின் கம்பேக்.. வித்தியாசமான வீரருக்கு குறி வைக்கிறது சிஎஸ்கே.. எதிர்பாராத திருப்பம்

சென்னை: டெல்லியை சேர்ந்த பிரதீப் சங்வான் என்ற இளம் வீரரை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இன்னும் பல அணிகளுக்கு இடையே தொடர்ந்து டிரேடிங் நடந்து வருகிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணியில் தற்போது இந்திய ஸ்பீட் பவுலர்கள் குறைவாக உள்ளனர். ஷரத்துல் தாக்கூர், தீபக் சாகர் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே உள்ளனர். இந்திய பவுலர்களில் லெப்ட் ஹேண்ட் ஸ்பீட் பவுலர்கள் யாரும் சிஎஸ்கே அணியில் இல்லை.

இந்தியா

இந்தியா

இதனால் இந்தியாவை சேர்ந்த லெப்ட் ஹேண்ட் ஸ்பீட் பவுலர்களை சிஎஸ்கே குறி வைக்கும் என்று கூறுகிறார்கள். ஒரே ஒரு இளம் லெப்ட் ஹேண்ட் ஸ்பீட் பவுலரை கண்டிப்பாக சிஎஸ்கே குறி வைக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி பிரதீப் சங்வான் என்ற இளம் வீரரை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது.

கடந்த சீசன்

கடந்த சீசன்

பிரதீப் சங்வான் கடந்த இரண்டு சீசனாக ஐபிஎல் போட்டியில் ஆடவில்லை. 2018 ஐபிஎல் போட்டியில் பிரதீப் சங்வான் மும்பை அணியில் ஆடினார். இதுவரை மொத்தமாக 39 ஐபிஎல் போட்டிகளில் 35 விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியில் இவர் சிறப்பாக ஆடினார்.

டெல்லி அணி

டெல்லி அணி

2009ல் டெல்லி அணியில் 13 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்தார்.தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக ஆடினார். டெல்லி அணிக்காக சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் பிரதீப் சங்வான் 4 போட்டியில் 7 விக்கெட் எடுத்தார்.

நல்ல பார்ம்

நல்ல பார்ம்

தற்போது நல்ல பார்மில் இருக்கும் இவரை சிஎஸ்கே குறி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு பிரதீப் சங்வானை சிஎஸ்கே எடுக்க முயலும் என்கிறார்கள். ராஜஸ்தான் போன்ற அணியும் இவரை குறி வைக்க முயலும் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, January 29, 2021, 18:10 [IST]
Other articles published on Jan 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+