For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"உங்களுக்கு 2 மாசம் டைம் தரேன்".. தோனி போடும் "பவானி" கணக்கு.. வாத்தி ரெய்டுக்கு ரெடியாகும் சிஎஸ்கே!

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடப்பது உறுதியாகி உள்ளதால் அதற்கு ஏற்றபடி வீரர்களை தேர்வு செய்யும் முடிவில் சிஎஸ்கே இருக்கிறது.

Recommended Video

Dhoni போடும் 'பவானி' கணக்கு | IPL 2021 | Oneindia Tamil

2021 ஐபிஎல் தொடருக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அடிபட்ட புலியான சிஎஸ்கே இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது.

நீக்கம்

நீக்கம்

அதன்படி கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடப்பது உறுதியாகி உள்ளதால் அதற்கு ஏற்றபடி வீரர்களை தேர்வு செய்யும் முடிவில் சிஎஸ்கே இருக்கிறது.

18ம் தேதி

18ம் தேதி

இதற்கான ஏலம் சென்னையில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் மும்பை மற்றும் தமிழக அணிகளில் முதல்தர போட்டிகளில் ஆடிய வீரர்களை குறி வைக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. இவர்களை சிஎஸ்கேவில் எடுத்து அடுத்த இரண்டு மாதத்திற்குள் தயார் செய்ய முடிவு செய்துள்ளனர்.

தயார்

தயார்

அதன்படி ஏப்ரல் மூன்றாம் வாரம் இந்த தொடர் தொடங்கும். இந்த தொடர் முழுக்க மஹாராஷ்டிராவில் உள்ள வான்கடே மைதானம், மும்பை மைதானம், டிஒய் பாட்டீல் மைதானம் ஆகிய மைதானங்களில் நடக்கும். நாக் அவுட் போட்டிகள் எல்லாம் அகமதாபாத்தில் நடக்கும்.

சிறப்பு

சிறப்பு

ஜூன் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரம் வரை இந்த தொடர் நடக்கும். இந்த நிலையில் இந்த பிட்ச்களில் நன்றாக ஆட கூடிய வீரர்களை சிஎஸ்கே எடுக்க உள்ளது. இளம் வீரர்களை தேர்வு செய்து இவர்களை 2 மாதம் பயிற்சி கொடுத்து பார்மிற்கு கொண்டு வர சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.

பார்ம்

பார்ம்

அதேபோல் ரெய்னா, ராபின் உத்தப்பா போன்ற வீரர்களை சிஎஸ்கே துருப்பு சீட்டாக பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. இவர்களில் ரெய்னா அஹமதாபாத் மைதானத்தில் நன்றாக ஆட கூடியவர். ராபின் உத்தப்பா மஹாராஷ்டிரா மைதானம் போன்ற கண்டிஷன்களில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டவர்.

வாய்ப்பு

வாய்ப்பு

இதனால் இவர்கள் சிஎஸ்கே அணியில் முக்கியத்துவம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சிஎஸ்கே இந்த முறை மைதானத்தை மனதில் கொண்டு ஆட்டத்திற்கு தயார் ஆகும் என்று கூறப்படுகிறது. ஏலத்திலும் இதனால் சிஎஸ்கே நிறைய ஸ் சர்ப்ரைஸ்களை கொடுக்கும் என்கிறார்கள்.

Story first published: Sunday, January 31, 2021, 15:51 [IST]
Other articles published on Jan 31, 2021
English summary
CSK will come up with a different plan as IPL 2021 will commence in India this season.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+