Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs ஆஸ்திரேலியா.. சச்சின் டெண்டுல்கர் ரெக்கார்ட் காலி.. டேவிட் வார்னர் செய்த தரமான சம்பவம்!

சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் முறியடித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

David Warner becomes the fastest player to score 1,000 runs in the World Cup and broke Sachin Tendulkar record

இதில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் பும்ரா பந்துவீச்சில் விராட் கோலியின் அபாரமான கேட்ச்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து டேவிட் வார்னர் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி இணைந்தது. இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். ஒரு கட்டத்தில் டேவிட் வார்னர் ஹர்திக் பாண்டியாவை அட்டாக் செய்ய தொடங்கினார்.

இந்த போட்டியில் டேவிட் வார்னர் 8 ரன்கள் கடந்த போது முக்கியமான சாதனை ஒன்றை படைத்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் 20 உலகக்கோப்பை இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.

தற்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்துள்ளார். சிறப்பாக ஆடிய டேவிட் வார்னர் 52 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட 41 ரன்கள் எடுத்தபோது, குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் டேவிட் வார்னர், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன் சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையான தொடக்க வீரராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை முறியடித்தார். அடுத்தடுத்து சச்சினின் சாதனைகளை முறியடித்து வருகிறார். இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் டேவிட் வார்னர் அபாயகரமான வீரராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 8, 2023, 16:59 [IST]
Other articles published on Oct 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+