Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் சிறந்த டான்ஸர்?.. வார்னருக்கும் அவரது மனைவிக்குமான போட்டி.. கமெண்டை வீசும் ரசிகர்கள் - வீடியோ!

சிட்னி: டேவிட் வார்னரின் டிக்டாக் வீடியோக்களை பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு அவர் தற்போது டான்ஸ் விருந்து வைத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்தவகையில் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த மே16ம் தேதி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு குடும்பத்தினருடன் இணைந்தனர்.

 வார்னரின் இன்ஸ்ட சேட்டை

வார்னரின் இன்ஸ்ட சேட்டை

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்த டிக்டாக் வீடியோக்களால் பெரும் வரவேற்பை பெற்றார். குறிப்பாக இந்திய பாடல்கள், மற்றும் திரைப்பட காட்சிகளுக்கு டிக் டாக் செய்து இந்தியர்களின் மனதை வென்றார்.

 மீண்டும் டிக்டாக்

மீண்டும் டிக்டாக்

தற்போது குடும்பத்தினருடன் ஜாலியாக நேரத்தை செலவிட்டு வரும் டேவிட் வார்னர், சமீபத்தில் தனுஷின் ரவுடி பேபி, ராமுலோ ராமுலா போன்ற பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டது வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்து டான்ஸர் அவதாரம் எடுத்துள்ளார்.

வைரல் வீடியோ

அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், டேவிட் வார்னர் மற்றும் அவரது மனைவி கேண்டீஸ் வார்னர் ஆகியோர் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். இருவரும் போட்டிப்போட்டு கொண்டு ஆடியுள்ள இந்த வீடியோவின் இறுதியில் அவர்களது குழந்தைகளும் தோன்றுகின்றனர். இந்த வீடியோவின் கேப்சனில், யார் சிறப்பாக ஆடினோம் என்று கேள்வி எழுப்பியுள்ள வார்னர், அடுத்த சில நாட்களுக்கு பல வீடியோக்களை போஸ்ட் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

சந்தேகம்

சந்தேகம்

ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணியுடனான தொடர்களில் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்குபெற்ற வீரர்கள் 6 முக்கிய வீரர்கள் இந்த தொடர்களில் வாய்ப்பு தரப்படவில்லை. அதில் டேவிட் வார்னரும் ஒருவர். ஐபிஎல் தொடரில் சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்த வார்னருக்கு வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்கள் மிக முக்கியமானது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பையில் பங்கு பெற இதில் இருக்கும் ஃபார்ம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இதில் வார்னர் பங்குபெறாததால் டி20 உலகக்கோப்பையி அவர் இருப்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

Story first published: Saturday, June 26, 2021, 19:20 [IST]
Other articles published on Jun 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+