Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘ராமுலோ ராமுலா’.. இன்ஸ்டாவில் சேட்டையை தொடங்கிய வார்னர்.. டைமிங்கில் கலாய்த்த மனைவி கேண்டிஸ்- வீடியோ

சிட்னி: குவாரண்டைன் நேரத்தில் வார்னர் செய்த இன்ஸ்டா சேட்டைகளை அவரின் மனைவியே கிண்டல் அடித்துள்ளது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அனைவரும் தாய்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்தவகையில் மாலத்தீவில் தங்கவைக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த மே16ம் தேதி நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 14 நாட்கள் குவாரண்டைனில் உள்ளனர்.

இன்ஸ்டா சேட்டைகள்

இன்ஸ்டா சேட்டைகள்

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கின் போது இன்ஸ்டாகிராம் பதிவுகளால் இந்தியர்களின் மனதை வென்றார். இந்திய திரைப்படங்களின் சீன்களையும், பாடல்களையும் அவர் இன்ஸ்டா ரீல்களாக செய்து பதிவிட்டு வந்தது ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரால் அவரின் குறும்பு வீடியோக்களை ரசிகர்கள் மிஸ் செய்தனர்.

ராமுலோ ராமுலா

ஐபிஎல் முடிந்துவிட்டதால் தற்போது மீண்டும் தனது சேட்டையை தொடங்கி விட்டார். கடந்த 19ம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியான ரவுடி பேபி பாடலுக்கு ரீல் செய்து வெளியிட்டது வைரலானது. இந்நிலையில் இன்று தெலுங்கு சினிமாவுக்கு தாவி உள்ளார். இந்த முறை அவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ராமுலோ ராமுலா' பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மனைவியே கிண்டல்

மனைவியே கிண்டல்

இதனை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் வார்னரின் மனைவி மட்டும் இன்ஸ்டாவில் வெளிப்படையாக கிண்டலடித்துள்ளார். வார்னரின் வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்துள்ள கேண்டிஸ் வார்னர், குவாரண்டை நாட்களில் உங்களுக்கு பொழுது போகவில்லையா வார்னர்? என சிரிப்பு எமோஜிகளை பதிவிட்டுளார். இதற்கு பதிலளித்துள்ள வார்னர், உனது கஷ்டம் தற்போது தான் எனக்கு புரிகிறது என தெரிவித்துள்ளார்.

ஃபுல் ஃபார்மில் வார்னர்

ஃபுல் ஃபார்மில் வார்னர்

டேவிட் வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மே 16ம் தேதி மாலத்தீவில் இருந்து ஆஸ்திரேலியா சென்றனர். அங்கு சிட்னியில் உள்ள ஒரு ஹோட்டலில் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே இன்னும் சில நாட்களுக்கு வார்னரின் சேட்டைகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, May 22, 2021, 21:39 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+