For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவ்ளோ நேரம் அட்வைஸ்; எல்லாம் போச்சு - மும்பை மகிழ்ச்சியை.. அந்த ஒரு சிக்ஸில் தூள் தூளாக்கிய அஷ்வின்

ஷார்ஜா: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில், டெல்லி அணி கடைசி ஓவரில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.2) டபுள் ஹெட்டர்ஸில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில், மும்பை நிர்ணயித்த 130 ரன்களை இலக்கை 19.1வது ஓவரில் சேஸ் செய்து டெல்லி வெற்றிப் பெற்றுள்ளது.

தடுமாறிய பாண்ட்யா

தடுமாறிய பாண்ட்யா

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா வெறும் 7 ரன்களில் ஆவேஷ் கான் ஓவரில் கேட்ச்சானார். அதன் பிறகு, மும்பை பேட்ஸ்மேன்களால் சீராக ரன்கள் அடிக்கவே முடியவில்லை. டி காக் 19 ரன்களில் அக்ஷர் படேல் ஓவரில் கேட்ச்சாக, சவுரப் திவாரி 15 ரன்களில் அக்ஷர் ஓவரில் அவுட்டானார். கடந்த போட்டிகள் போல் அல்லாமல், இந்த மேட்சில் தனது பழைய ஃபார்மை சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்தினாலும், 33 ரன்களே அடிக்க முடிந்தது. அவரும் அக்ஷர் ஓவரில் கேட்ச்சாகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்ட் 6 ரன்களில் நோர்க்யா ஓவரில் போல்டானார். இறுதியில், பாண்ட்யா பிரதர்ஸ் களத்தில் இருந்தாலும் அவர்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஹர்திக் 17 ரன்களில், ஆவேஷ் கானின் ஆவேச பந்துவீச்சில் ஸ்டெம்ப்புகள் சிதற வெளியேறினார். இறுதியில், க்ருனால் பாண்ட்யா 13 ரன்கள் எடுக்க மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது மும்பை. டெல்லி தரப்பில் அக்ஷர் படேல் 4 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிதப்பான ஆட்டம்

மிதப்பான ஆட்டம்

இன்றைய நாள் அக்ஷர் படேல் நாளாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை. அதேபோல், ஆவேஷ் கானும் 4 ஓவர்கள் வீசி, 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 8 ரன்களில் பொல்லார்டால் ரன் அவுட் செய்யப்பட, ப்ரித்வி ஷா 6 ரன்களில் க்ருனால் பாண்ட்யா ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் 9 ரன்களில் கோல்டர் நைல் ஓவரில் போல்டாக, டெல்லி அணி 30 ரங்களுக்கெல்லாம் 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. எனினும், இன்றைய போட்டியில், மும்பை ஸ்பின் கொண்டு அட்டாக் செய்யும் என்பதை அறிந்திருந்தும், டெல்லி அணி வீரர்கள் சற்று மிதப்புடன் விளையாடியது அப்பட்டமாக தெரிந்தது.

வீம்பாக வெளியேறிய ரிஷப்

வீம்பாக வெளியேறிய ரிஷப்

உலகக் கோப்பை டி20 அணியில் இடம்பெற்றுள்ள ப்ரித்வி ஷாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம் மீண்டும் தொடர் கதையாகியுள்ளது. க்ருனால் ஓவரில் அவர் மிக சாதாரணமாக தனது விக்கெட்டை இழந்தார். ஜெயந்த் யாதவ் வீசிய பந்து, அவ்வளவு பொறுமையாக வந்துக் கொண்டிருக்க, அவசர அவசரமாக ஒரு தேவையில்லாத ஷாட்டை ஆடப் போய் தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டீவ் ஸ்மித், "உள்ளேன் ஐயா" ஆட்டத்தை ஆடிச் செல்ல, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வெற்றியை உறுதி செய்ய போராடினர். ஆனால், டெல்லி அணிக்காகவே ஜெயந்த் யாதவை வளர்த்து வரும் மும்பை அணியிடம் ஏமாந்த கேப்டன் ரிஷப் பண்ட், 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சிக்ஸ் லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்த போதும், தனது ஆட்ட பாணியை மாற்றிக் கொள்ளாத ரிஷப், தனது விக்கெட்டையும் இழந்தார்.

4 ஓவரில் 25

4 ஓவரில் 25

இதையடுத்தது ஹெட்மயருக்கு முன்பு களமிறங்கிய அக்ஷர் படேல் 9 ரன்களில் போல்ட் ஓவரில் எல்பிடபிள்யூ ஆக, ஹெட்மயர் 8 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் லீடிங் எட்ஜ் ஆகி ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருபக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் சைலன்ட்டாக களத்தில் இருக்க, டெல்லிக்கு நெருக்கடி வெகுவாக அதிகரித்தது. கடைசி நான்கு ஓவரில் டெல்லி வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 16 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு, ஒவ்வொரு பந்திலும் பரபரப்பு நிலவியது. ஒரு நல்ல ஷாட்டை டெல்லி எதிர்நோக்கிய நிலையில், கோல்டர் நைல் ஓவரில் ஐயர் ஒரு பவுண்டரி அடிக்க, பிரஷர் இம்மியளவு குறைந்தது. எனினும், மறுபக்கம் அஷ்வின் பேட்டில் இருந்து காற்று மட்டுமே வந்துக் கொண்டிருந்ததால், பிரஷர் மீண்டும் டெல்லி பக்கமே திரும்பியது.

மும்பை காலி

மும்பை காலி

18வது ஓவரை வீசிய பும்ரா அந்த ஓவரின் முதல் 5 பந்தை சிறப்பாக வீசினாலும், கடைசி பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பவுண்டரி அடிக்க, வெற்றிக்கு 12 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. Required Run Rate 6க்கும் கீழ் குறைந்தது. இதனால், மேற்கொண்டு மும்பை பவுலர்களாக எதுவும் செய்ய முடியவில்லை. இதனால், 19.1வது ஓவரில், டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றிப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் இந்த போட்டியோடு சேர்த்து, 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை, 7வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால், மும்பை 10 புள்ளிகளுடன் அதே 6வது இடத்தில் நீடிக்கிறது.

Story first published: Saturday, October 2, 2021, 19:49 [IST]
Other articles published on Oct 2, 2021
English summary
delhi capitals beat mumbai indians ipl 2021 - மும்பை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+