Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேபிடல்சுக்கு அடுத்த இடி... நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட பௌலர்

மும்பை : அணியில் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் ஐபிஎல் 2021 தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்நிலையில் அணியில் குவாரன்டைனில் இருந்த தென்னாப்பிரிக்க பௌலர் ஆன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி தொடரின் தனது இரண்டாவது போட்டியில் மோதவுள்ள நிலையில், இது அணிக்கு பேரிடியாக கருதப்படுகிறது.

முதல் போட்டியில் வெற்றி

முதல் போட்டியில் வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் தனது முதல் போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக கடந்த 10ம் தேதி மோதிய இளம் வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது. இந்நிலையில் நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

நார்ட்ஜேவுக்கும் கொரோனா

நார்ட்ஜேவுக்கும் கொரோனா

அந்த அணியின் அக்சர் படேலுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர் தற்போது வரை குவாரன்டைனில் உள்ளார். இந்நிலையில் தற்போது அணியின் இரண்டாவது வீரராக நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் குவாரன்டைனில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட நார்ட்ஜே

தனிமைப்படுத்தப்பட்ட நார்ட்ஜே

தென்னாப்பிரிக்க வீரரான நார்ட்ஜே இந்தியா வந்தபோது அவருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் குவாரன்டைனில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தற்போது பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மற்றவர்களுக்கு நெகட்டிவ்

மற்றவர்களுக்கு நெகட்டிவ்

அவருடன் இந்தியா வந்த தென்னாப்பிரிக்க வீரர்கள், காகிசோ ரபடா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி மற்றும் குவின்ட டீ காக் ஆகியோருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ரபடாவும் டெல்லி கேபிடல்ஸ் அணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கேபிடல்ஸ்க்கு பேரிடி

டெல்லி கேபிடல்ஸ்க்கு பேரிடி

இதனிடையே குவின்டன் டீ காக் தன்னுடைய 7 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். இந்நிலையில் நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதித்துள்ளதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி தொடர்ந்து தன்னுடைய பௌலிங்கில் இடியை சந்தித்து வருகிறது.

Story first published: Wednesday, April 14, 2021, 15:44 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+