தோனி, பிளமிங் எல்லாம் வரமாட்டார்கள்.. நீங்களே பார்த்துக்கோங்க.. சிஎஸ்கேவிற்கு பேட் நியூஸ்.. ஷாக்!
சென்னை: 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடக்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான கெட்ட செய்தி ஒன்று சென்றுள்ளது.
2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை மறுநாள் நடக்கிறது. சென்னையில் மினி ஏலமாக இது நடக்க உள்ளது.
1000க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சென்னை
இந்த ஏலத்தில் சென்னை அணி யாரை எல்லாம் எடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட பல முக்கியமான வீரர்களை சிஎஸ்கே அணி குறி வைக்கும் என்கிறார்கள். முக்கியமாக தமிழக வீரர்கள் சிலரை சிஎஸ்கே அணி இந்த முறை ஏலம் எடுக்கும் என்கிறார்கள்.

ஏலம்
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடக்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான கெட்ட செய்தி ஒன்று சென்றுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கலந்து கொள்ள மாட்டார். பொதுவாக சிஎஸ்கே ஏலத்திற்கு பிளமிங் வருவார்.

கொரோனா
ஆனால் கொரோனா காரணமாக பிளமிங் சென்னைக்கு வர போவதில்லை. அதேபோல் எப்போதும் தோனி ஏலத்திற்கு வர மாட்டார். இந்த முறையும் இவர் வர மாட்டார் . இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விசுவநாதன்தான் ஏலம் எடுக்க போகிறார்.

காரணம் என்ன
கொரோனா, பயணம் ஆகியவை காரணமாக இவர்கள் சென்னை வர போவதில்லை. அதேபோல் இது மினி ஏலம்தான். இதனால் குறிப்பிட்டு வீரர்களை மட்டுமே சிஎஸ்கே குறி வைக்கும். இதனால் பிளமிங் ஏலத்திற்கு வர மாட்டார்.

பின்னணி
ஆனால் இவர்கள் இருவரும் வீடியோ காலிலும், போனிலும் இணைந்து இருப்பார்கள். ஏலத்தில் யாரை எடுக்க வேண்டும் என்று போன் மூலம் இவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். இதனால் சிஎஸ்கே அணி வீரர்களை எடுப்பதில் கொஞ்சம் திணற வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications