Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை நம்பித்தான் இருக்கேன்.. 24 வயது இளம் வீரர் மீது பந்தயம் கட்டிய தோனி.. இது நல்லதுக்கானு தெரியலை

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி முக்கியமான வீரர் ஒருவரை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான மினி ஏலம் வரும் பிப்ரவரி 18ம் தேதி நடக்க உள்ளது.

இதற்காக 1114 வீரர்கள் தங்கள் பெயரை பதவி செய்து இருந்தனர். இதில் 290 பேரின் பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

சிஎஸ்கே அணி இந்த முறை ஏலத்தில் மூன்று விதமான வீரர்களை குறி வைக்க உள்ளது. ஒரு ஆல் ரவுண்டர், இரண்டு ஸ்பின் பவுலர், ஒரு ஒப்பனர் ஆகியரை எடுக்க உள்ளது. இதில் வெளிநாட்டு வீரர் ஒருவரும் சிஎஸ்கே அணியால் எடுக்கப்படுவார்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

இப்படிப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி ஓப்பனிங் வீரராக ரூத்துராஜ் கெய்கவாட்டை அதிகம் நம்பி உள்ளது . கடந்த சீசனில் இவர் கடைசியாக ஆடிய மூன்று போட்டியிலும் அரைசதம் அடித்தார். மூன்று போட்டியிலும் இவர்தான் மேட்ச் வின்னர்.

முதல் 10 பால்

முதல் 10 பால்

முதல் 10 பந்துகளில் நிதானம் காட்டினாலும் போக போக அடித்து வெளுத்து 17வது ஓவரிலேயே வெற்றிபெற வைப்பது இவரின் ஸ்டைல். இன்னொரு ஓப்பனிங் வீரராக வெளிநாட்டு வீரர் வர உள்ளார். இதனால் தோனி அதிகமாக ரூத்துராஜ் மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ரூத்துராஜ்

ரூத்துராஜ்

ரூத்துராஜ் நன்றாக தொடக்கம் கொடுப்பார். கடந்த வருடம் போல ஓப்பனிங் சொதப்ப வாய்ப்பு இல்லை. இவர் கொடுக்கும் தொடக்கத்தை வைத்துதான் சிஎஸ் கே அணி இருக்கும் என்று தோனி நினைக்கிறார். அதிலும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் இவரின் ஆட்டம் பார்த்து தோனி உற்சாகத்தில் உள்ளார்.

உற்சாகம்

உற்சாகம்

சிஎஸ்கே அணியில் இவர் நீண்ட காலம் ஆட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ரூத்துராஜ் கண்டிப்பாக தோனியின் நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. இவருக்கு இணையாக இறங்க போகும் வெளிநாட்டு வீரர் யார் என்பதே இப்போது அதிக கேள்வியாக உள்ளது.

Story first published: Friday, February 12, 2021, 16:15 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+