Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் ஒரு ஸ்கோரா.. அசால்டாக ஆஸி.யை வீழ்த்தினோம்: டோணி சொல்லும் வெற்றி ரகசியம்

சிட்னி: ஆஸ்திரேலியா என்னதான் பெரிய ஸ்கோர் அடித்திருந்தாலும், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடுதான் இந்திய அணி பேட்டிங் செய்தது என்று கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் இரு டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், டாசில் வென்று, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.

கடைசி பந்தில் திரில்

கடைசி பந்தில் திரில்

இரண்டாவது பேட் செய்து, 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிச் சென்ற இந்திய அணி, ஆட்டத்தின் கடைசி பந்தில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், அபாரமாக வெற்றி பெற்று அசத்தியது.

வீரர்கள் மாறினர்

வீரர்கள் மாறினர்

போட்டிக்கு பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் மகேந்திரசிங் டோணி கூறியதாவது: சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணி முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டது. அப்போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு, அடுத்தடுத்த 3 டி20 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.

கூடுதல் முயற்சி

கூடுதல் முயற்சி

முதல் 4 ஒருநாள் போட்டிகளில் தோற்றிருந்தாலும், அனைத்து போட்டிகளிலும் மிகவும் நெருங்கி வந்தே வெற்றியை பறிக்க முடியாமல் போனது. கூடுதலாக ஒரு சிறு முயற்சி தேவைப்பட்டது. அது சிட்னி ஒருநாள் போட்டிக்கு பிறகு கிடைக்க தொடங்கியது.

பேட்டிங் ஸ்டிராங்

பேட்டிங் ஸ்டிராங்

இத்தொடர் முழுவதுமே, பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் பந்து வீச்சாளர்கள் டி20 போட்டிகளில் தங்களை மேம்படுத்திக்கொண்டனர். அவர்களின் பங்களிப்புதான் வெற்றியை இந்தியா பக்கம் திருப்ப தொடங்கியது.

பும்ராவுக்கு ஷொட்டு

பும்ராவுக்கு ஷொட்டு

கடைசி கட்ட ஓவர்களில், ஜஸ்ப்ரித் பும்ராவும், ஆஷிஷ் நெஹ்ராவும் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக யார்க்கர்கள் அருமையாக இருந்தன. இதனால் ஆஸ்திரேலியா இன்னும் அதிகப்படியான ரன்களை குவிக்க முடியாமல் தடுக்க முடிந்தது.

ஹர்பஜனுக்கு பெப்பே

ஹர்பஜனுக்கு பெப்பே

டி20 போட்டிகளில் கூடுதலாக ஒரு ஃபீல்டர் உள் வட்டத்திற்கு வெளியே நிற்க முடியும் என்பது ஸ்பின்னர்களுக்கு சற்று உத்வேகத்தை கொடுத்திருக்கலாம். ஹர்பஜன்சிங்கை நேரடியாக அணியில் களமிறக்க முடியாத சூழல்தான் தற்போது உள்ளது.

வாய்ப்பிருந்தால் பார்ப்போம்

வாய்ப்பிருந்தால் பார்ப்போம்

ஸ்பின் பந்து எடுபடும், இந்தியாவில் இன்னும் பல டி20 போட்டிகளில் நமது அணி ஆட உள்ளது. எதிரணியில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் அப்போது ஆப்-ஸ்பின்னரான ஹர்பஜன் அணிக்கு தேவைப்படுவார்.

இதெல்லாம் ஸ்கோரா

இதெல்லாம் ஸ்கோரா

கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 197 ரன்களை குவித்தது. இருப்பினும் இது எட்டக்கூடிய ஸ்கோர் என்றுதான் நாங்கள் நம்பினோம். பனி பெய்ய ஆரம்பித்ததை வைத்து, பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிக்க முடியும் என்பதை உணர்ந்திருந்தோம்.

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

கோஹ்லி விக்கெட் வீழ்ந்த பிறகு, அடுத்த பல பந்துகளில் அணியின் ரன் ரேட் குறைந்தாலும், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் கடைசிவரை இழக்கவில்லை. இவ்வாறு டோணி தெரிவித்தார்.

Story first published: Monday, February 1, 2016, 12:34 [IST]
Other articles published on Feb 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+