Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. இவங்களை எடுங்க.. உறுதியாக அடித்து சொன்ன தோனி.. பிரத்யேக லிஸ்ட்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எடுக்க போகும் வீரர்களின் லிஸ்ட் தயாராகிவிட்டது என்று கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஐபிஎல் அணிகள் தாங்கள் வெளியேற்றும் வீரர்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இதற்காக வெளியிட்டுவிட்டது.

சிஎஸ்கே அணியும் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கான மினி ஏலம் சென்னையில் வரும் 18ம் தேதி நடக்க உள்ளது.

 சென்னை

சென்னை

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி எடுக்க போகும் வீரர்களின் லிஸ்ட் தயாராகிவிட்டது என்று கூறப்படுகிறது. நான்கு விதமாக பிரித்து வீரர்களை தேர்வு செய்ய சிஎஸ்கே அணி முடிவு செய்துள்ளது. முறைப்படி சிஎஸ்கே அணியில் ஒப்பனர்கள், ஸ்பீட் பவுலர்கள், ஸ்பின் பவுலர்கள். மிடில் ஆர்டர் வீரர்கள், ஆல் ரவுண்டர்கள், பினிஷர்கள் தேவை.

தேவை

தேவை

ஆனால் சிஎஸ்கே அணி இதில் ஒரு ஓப்பனிங் வீரர், இரண்டு ஸ்பின் பவுலர், ஒரு பினிஷர் ஆகியோரை மட்டுமே குறி வைக்கும் என கூறுகிறார்கள் . அதன்படி ஒரு ஓப்பனிங் வீரருக்கு ஆரோன் பின்ச், மார்னஸ் லபுஷேன், டேவிட் மாலன் ஆகியோரில் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஸ்பின்

ஸ்பின்

ஸ்பின் பவுலிங்கில் பவான் நேகி, சித்தார்த் மணிமாறன் ஆகிய வீரர்களில் ஒருவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பினிஷர் ரோலில் மேக்ஸ்வெல் அல்லது ஷாருக்கான் அணியில் எடுக்கப்படலாம். இதற்கான பிரத்யேக லிஸ்ட் தயாரிக்கப்படடுவிட்டது . இந்த லிஸ்டை தோனி ஆலோசனைக்கு பின் உருவாக்கி உள்ளது.

கொடுத்தார்

கொடுத்தார்

இதற்கான லிஸ்டை தோனி சிஎஸ்கே நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார். சில வீரர்களை எவ்வளவு கோடி கொடுத்து கூட வாங்குங்கள் என்று தோனி கூறியுள்ளார். ஆரோன் பின்ச் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, February 11, 2021, 16:05 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+