Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏதாவது சொல்லுங்க.. தொடர்பு எல்லைக்கு அப்பால் தோனி.. நேரம் நெருங்கிட்டே இருக்கு.. சிக்கலில் சிஎஸ்கே!

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் மீது கவனம் செலுத்தாமல் தோனி மற்ற பணிகளை
செய்து வருவது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே கோபத்தை உருவாக்கி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி தீவிரமாக தயாராகி வருகிறது. வரும்
பிப்ரவரி 17-18 தேதிகளில் சென்னையில் ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளது.

இந்த ஏலத்தில் சென்னை அணி யாருக்கு எல்லாம் குறி வைக்கும் என்று
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இளம் வீரர்கள் சென்னை அணியால் ஏலம்
எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏலம்

ஏலம்

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு சிஎஸ்கே அணியில் இருந்து

முக்கியமான சில வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணி மொத்தமாக வெளியே

அனுப்பிய வீரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதன்படி கேதார் ஜாதவ்,

முரளி விஜய், பியூஸ் சாவ்லா, ஹர்பஜன் சிங், மோனு சிங் ஆகியோர்

நீக்கப்பட்டுள்ளனர். இது போக வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்னொரு பக்கம் ராபின் உத்தப்பா போன்ற மூத்த வீரர்களை சிஎஸ்கே அணி

மீண்டும் ஏலம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடர்

மீது கவனம் செலுத்தாமல் தோனி மற்ற பணிகளை செய்து வருவது சிஎஸ்கே ரசிகர்கள்

இடையே கோபத்தை உருவாக்கி உள்ளது. ஐபிஎல் ஏலம் நடக்க இன்னும் 3 வாரங்களே உள்ளது.

மூன்று வாரங்கள்

மூன்று வாரங்கள்

ஆனால் இந்த ஏலம் மீது தோனி பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. தனது பண்ணை

விவசாய பணிகளைத்தான் தோனி கவனித்து வருகிறார். தனது பண்ணையில் விளையும்

பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் முனைப்பில் தோனி இருக்கிறார்.

மோசம்

மோசம்

இதனால் அவரை எளிதாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருக்கிறார். ஏலம் குறித்தும், புதிய

வீரர்கள் குறித்தும் தோனியிடம் விவாதிக்க முடியாமல் நிர்வாகிகள் இதனால்

கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பயிற்சி

பயிற்சி

அதேபோல் தோனியிடம் பெரிய அளவில் கிரிக்கெட் பயிற்சி இல்லை. கடந்த ஒன்றரை

வருடமாக இவர் கிரிக்கெட் ஆடவே இல்லை. அப்படி இருக்கும் போது தோனி ஆட்டம்

மீது கவனம் செலுத்தமால் இப்படி மேம்போக்காக செயல்பட்டு வருகிறார்.

 வருவார்

வருவார்

கடைசி ஒரு வாரத்தில் பயிற்சி மேற்கொண்டு தோனி பார்மிற்கு திரும்ப முடியாது.

அதேபோல் புதிய வீரர்களை அணியில் கொண்டு வந்து டீம் உருவாக்க நேரம்

எடுக்கும். ஆனால் இதில் எல்லாம் தோனி கவனம் செலுத்தாமல் தொடர்ந்து வேறு

பணிகளில் கவனம் செலுத்துவது அதிர்ச்சி அளித்துள்ளது.

Story first published: Thursday, January 28, 2021, 16:46 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+