Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிங் எப்போதும் கிங்தான்.. உலகின் மிகச்சிறந்த பினிஷர் தோனி.. ஆஸ்திரேலியா ஜாம்பவான் புகழாரம்

துபாய்: பல்வேறு அவப்பெயர்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமாக ஐ.பி.எல் 2021 பைனலுக்கு சென்று விட்டது. ருத்ராஜின் தரமான ஆட்டம், கேப்டன் தோனியின் பிரில்லியண்ட் பினிஷிங் ஆகியவை சென்னையை பைனலுக்கு அழைத்து சென்றுள்ளது.

டாஸ் வென்றதும் தயக்கமேயின்றி டெல்லிக்கு எதிராக முதலில் பந்துவீச தீர்மானித்தார் தோனி. தவான் சீக்கிரமே வெளியேற காட்டடி அடித்தார் பிரித்வி ஷா. ஆனால் சென்னை பவுலர்கள் ஷ்ரேயஸ், அக்ஷர், பயமுறுத்திய பிரத்விஷா என்று அடுத்தடுத்து வெளியேற்ற 80 ரன்களுக்கு 4 பேரை இழந்து தவித்தது டெல்லி.

தோனி படை

தோனி படை

ஆனால் இறுதி கட்டத்தில் ஹெட்மெயரின் பங்களிப்பு, கேப்டன் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரை சதம் ஆகியவை டெல்லி அணி 172 என்ற சவாலான இலக்கை எட்ட வைத்தது. இரண்டாம் பகுதியில் பேட்டிங் செய்வது எளிது என கெத்தாக களமிறங்கிய தோனி படைக்கு ஆரம்பமே அதிர்ச்சி. டூ பிளிசிஸ் 1 ரன்னில் அவுட்டாக்கினார். ஆனால் மறுப்பக்கம் இந்த சீசனில் ஏற்கனவே கலக்கி கொண்டிருக்கும் ருத்ராஜ் கெய்க்வாட் பட்டையை கிளப்ப, கடந்த இரண்டு போட்டிகளில் ஏமாற்றிய ராபின் உத்தப்பா இந்த போட்டியில் விஸ்வரூபம் எடுத்தார்.

பினிஷிங் கிங்

பினிஷிங் கிங்

கெய்க்வாட் 50 பந்துகளில் 70 ரன்கள், உத்தப்பா 44 பந்துகளில் 66 ரன்கள் என்று வெளியேற, ராயுடு 1 ரன், ஷர்துல் தாக்கூர் கோல்டன் டக்கில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட தோனி களத்தில் இருந்தார். தொடர்ந்து 3 பவுண்டரிகள் அடித்து தனது வழக்கமான ஸ்டைலில் ஆட்டத்தை முடித்து வைத்தார் தோனி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல் தன் மீதான விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்து, அணியையும் பைனலுக்கு கூட்டி சென்றுள்ளார் தோனி.

ரிக்கி பாண்டிங் புகழாரம்

ரிக்கி பாண்டிங் புகழாரம்

பினிஷிங் டச் கொடுத்த தோனியை ரசிகர்கள் கொண்டாடி வர, டெல்லி அணி தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனுமான ரிக்கி பான்டிங் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார். நேற்றைய ஆட்டம் முடிந்தவுடன் இது தொடர்பாக பேசிய ரிக்கி பாண்டிங், ' தோனி ஆட்டத்தை முடிப்பதில் சிறந்தவர்களில் ஒருவராக இருந்தார், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

 மிகச்சிறந்த பினிஷர்

மிகச்சிறந்த பினிஷர்

ராயுடு அவுட்டானவுடன் நாங்கள் ஜடேஜாவா அல்லது தோனியா என்று யோசித்துக்கொண்டிருந்தோம், ஆனால் நான் தோனிதான் வருவார் என்று உறுதியாக நம்பினேன். தோனிக்கு எதிரான திட்டத்தை நீங்கள் சரியாக செயல்படுத்தவில்லை என்றால் அவர் உங்களை ஆட்டிபடைத்து விடுவார். தோனி ஓய்வு பெற்றதும், கிரிக்கெட் விளையாட்டில் பார்த்த மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவராக அவர் நினைவுகூரப்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

Story first published: Monday, October 11, 2021, 16:18 [IST]
Other articles published on Oct 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+