அடுத்தாண்டு ப்ளான் என்ன?... தோனியின் சூசக பதில்.. குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்!
அமீரகம்: அடுத்தாண்டு சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா என்பது குறித்து எம்.எஸ்.தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றுடன் 14-வது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4வது முறையாக சிஎஸ்கே மகுடம் சூடியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 192 ரன்கள் குவிக்க அதன் பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 165 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது.

சிஎஸ்கே அபார வெற்றி
இந்த வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ளது. இது ரசிகர்களிடையே மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப்பை வென்றுக் கொடுத்தவுடன் தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்து நேற்று பேசினார்.

தோனியின் திட்டம் என்ன?
போட்டி முடிந்தவுடன் தோனியிடம், அடுத்த ஆண்டு உங்களது திட்டம் என்ன ? என ஹர்ஷா போக்லே கேட்டார். அதற்கு பதிலளித்த தோனி, எல்லாம் பிசிசிஐயின் கையில்தான் உள்ளது. ஏனெனில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைய இருக்கின்றன. அதன் காரணமாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
Recommended Video

எங்களின் குறிக்கோள்
சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடுவது முக்கியமல்ல. சிஎஸ்கே அணியின் பெஸ்ட் எப்படி கிடைக்கும் என்பதுதான் சரியான முடிவு. அடுத்த 10 ஆண்டுகளுக்கான சிஎஸ்கே அணி ஒரு கோர் டீமை உருவாக்க வேண்டும். அது மட்டுமே தற்போது நாங்கள் முக்கியமாக பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

தோனியின் ப்ளான் உறுதியானது
தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஹர்ஷா போக்லே, தோனியை நோக்கி ஒரு பெரிய இடத்தில் ஜாம்பவான் அணியாக சி.எஸ்.கே அணியை விட்டு செல்கிறார் என்று கூறினார். உடனே தோனி சிரித்தபடி இன்னும் சென்னை அணியில்தான் இருக்கிறேன் எங்கும் போகவில்லை என்று தோனி சிரித்தபடி அந்தப் பேட்டியை முடித்து வெளியேறினார். இதனால் தோனி அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் கண்டிப்பாக இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications