Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு பேரை வைத்துக்கொண்டா இப்படி செய்தீர்கள்? தமிழக வீரர்களால் சிக்கலில் தோனி.. என்ன நடந்தது?

சென்னை: சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக வீரர்கள் பலர் சிறப்பாக ஆடி வரும் நிலையில் சிஎஸ்கே அணி கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

தற்போது நடந்து வரும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி அரையிறுதி ஆட்டத்தை நோக்கி சென்று இருக்கிறது.

தமிழக அணியில் இந்த முறை இடம்பிடித்த இளம் வீரர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறார்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சர்வதேச தளத்தில் சிறப்பாக ஆடி வரும் வீரர்களான நடராஜன், வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின் போன்ற வீரர்களுக்கு சிஎஸ்கேவில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் கலக்கும் முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி போன்ற வீரர்களுக்கும் சிஎஸ்கேவில் இடமில்லை.

மோசம்

மோசம்

இப்படிப்பட்ட நிலையில் அணியில் இருக்கும் ஜெகதீசன் போன்ற வீரர்களுக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. இதுவும் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. தற்போது சையது முஷ்டாக் கோப்பையில் ஆடும் தமிழக வீரர்களும் சிஎஸ்கேவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு தமிழக வீரர் இந்த தொடரில் சிறப்பாக ஆடுகிறார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

பாபா அபராஜித, ஜெகதீசன், ஷாருக்கான், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், சோனு யாதவ் என்று பேட்டிங் பவுலிங் இரண்டிலும் தமிழக வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதிலும் இந்த தொடர் முழுக்கவே மற்ற அணி வீரர்களை விட தமிழக வீரர்கள்தான் சிறப்பாக ஆடி வருகிறார்கள். தொடர்ந்து பார்மில் இருக்கிறார்கள்.

எடுக்கவில்லை

எடுக்கவில்லை

ஆனால் இப்படிப்பட்ட தமிழக வீரர்களை எடுப்பதில் சிஎஸ்கே அணி கொஞ்சம் கூட ஆர்வம் காட்டுவதில்லை. அணியில் இருந்த பாபா அபராஜித போன்ற வீரர்களை கூட சிஎஸ்கே அணி நீக்கிவிட்டது. இதனால் தோனி கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்.

 முதிய வீரர்கள்

முதிய வீரர்கள்

சிஎஸ்கே முழுக்க முதிய வீரர்களை வைத்துக்கொண்டு தோனி கஷ்டப்படுகிறார். இதுபோன்ற இளம் வீரர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் தோனி பயன்படுத்துவது இல்லை என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

Story first published: Wednesday, January 27, 2021, 12:22 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+