Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க சொல்றத நான் கேக்கணுமா.. தேர்வுக் குழு தலைவருக்கு தண்ணி காட்டும் தோனி

Recommended Video

விஜய் ஹசாரே தொடரில் தோனி பங்கேற்காததற்கு என்ன காரணம்?- வீடியோ

ஹைதராபாத் : தோனி உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்பார். அதில் சில போட்டிகளில் ஆடுவார் என சில நாட்கள் முன்பு கூறி இருந்தார் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்.

ஜார்கண்ட் அணி தற்போது விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. காலிறுதி வரை முன்னேறி உள்ளது அந்த அணி.

தற்போது தேர்வுக் குழு தலைவர் கூறியதற்கு மாறாக தோனி, இந்த தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடவில்லை என உறுதி செய்துள்ளார் ஜார்கண்ட் அணியின் பயிற்சியாளர். அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் ஆடுவாரா?

உள்ளூர் போட்டிகளில் ஆடுவாரா?

தோனியின் பேட்டிங் பார்ம் சமீப காலமாக சரியில்லை. அதை சரி செய்ய அவர் உள்ளூர் போட்டிகளில் ஆடுவாரா? என சிலர் கேள்வி எழுப்பினர். கவாஸ்கர் உள்ளிட்டோர் கூட தோனி உள்ளூர் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக பங்கேற்றால் அது அந்த மாநில வீரர்களுக்கும் உதவியாக இருக்கும் என கூறினார்.

மீண்டும் பழைய தோனியை பார்க்கவே முடியாதா? ரசிகர்கள் ஏக்கத்தை போக்க சூப்பர் யோசனை

சமநிலையை குலைக்க வேண்டாம்

சமநிலையை குலைக்க வேண்டாம்

அதற்கேற்ப, இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வுக் குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத், தோனி ஜார்கண்ட் அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் சில போட்டிகளில் பங்கேற்பார் என கூறி இருந்தார். ஆனால், அதற்கு மாறாக தோனி இப்போது ஜார்கண்ட் அணிக்கு ஆட மாட்டார் என்ற செய்தி வந்துள்ளது. ஜார்கண்ட் அணியின் பயிற்சியாளர் ராஜீவ் குமார் இது பற்றி கூறுகையில், "ஜார்கண்ட் அணி தோனி இல்லாமலேயே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி வரை முன்னேறி உள்ளது. இந்த சமயத்தில் வந்து அணியில் சேர்வது சரியாக இருக்காது என தோனி நினைக்கிறார். அணியின் சமநிலையை குலைக்க அவர் விரும்பவில்லை" என கூறினார்.

காரணமே சொல்லாம கழட்டி விட்ட தேர்வுக் குழு.. கடுப்பில் முரளி விஜய்

தோனியிடம் பேசினாரா? இல்லையா?

தோனியிடம் பேசினாரா? இல்லையா?

தேர்வுக் குழு வீரர்களிடம் சரியான முறையில் தொடர்பு கொண்டு அவர்களின் நீக்கம் பற்றிய விளக்கங்களை அளிப்பதில்லை என்ற புகார் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் ஏன் நீக்கப்பட்டனர் என தங்களுக்கு யாரும் விளக்கம் அளிக்கவில்லை என கூறி இருந்தனர். அப்போதே எதிர்ப்பை சந்தித்த தேர்வுக் குழு, தற்போது தோனி விஷயத்திலும் மாற்றிக் கூறியுள்ளது. தோனியிடம் பேசி தான் அவர் உள்ளூர் போட்டியில் ஆடுகிறார் என தேர்வுக் குழு தலைவர் கூறினாரா? என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. தோனியின் முடிவால் தேர்வுக் குழு தலைவருக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது. தோனி தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

https://tamil.mykhel.com/cricket/murali-vijay-says-on-team-selectors-that-nobody-communicate-011955.html

எப்படி தொடர்பு கொள்கிறார்?

எப்படி தொடர்பு கொள்கிறார்?

இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "எம்எஸ்கே பிரசாத் தோனியோடு எப்படி தொடர்பு கொள்கிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். விவிஎஸ் லக்ஷ்மன் கூட ஓய்வு பெறும் முன் தோனியை தொடர்பு கொள்ள முயலவில்லை என கேள்விப்பட்டேன். எம்எஸ்கே பிரசாத் கூறுவது உண்மையாக இருக்கும் என நம்புகிறேன்" என கேலியாக கூறினார்.

கோலி, ரவி சாஸ்திரியை எதிர்த்து தேர்வுக் குழு பேச முடியாது.. ஓப்பனாக பேசும் கிர்மானி

Story first published: Monday, October 15, 2018, 13:45 [IST]
Other articles published on Oct 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+