Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட்டில் தோற்றால் அதுக்காக ஏன் ஐபிஎல்லைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்கள்.. டோணி டென்ஷன்

லண்டன்: டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி, தோற்றதற்காக ஐபிஎல் போட்டிகள் மீது யாரும் பொறாமைப்படாதீர்கள் என்று இந்திய அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, அதில் மூன்று டெஸ்டுகளில் படு மோசமாக தோல்வியை தழுவியது.

ஹாட்ரிக் தோல்வி

ஹாட்ரிக் தோல்வி

ஒரு டெஸ்ட் போட்டி டிராவிலும், மற்றொரு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியும் பெற்றது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டியிலும் தொடர்ச்சியாக இந்தியா மோசமாக விளையாடி தோற்றது.

பொறுந்திருந்து பாருய்யா..

பொறுந்திருந்து பாருய்யா..

மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில், போட்டிக்கு பிறகு நிருபர்களுக்கு கேப்டன் டோணி பேட்டியளித்தார். தோல்வி குறித்து கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று மட்டும் பதில் அளித்தார்.

ஹாட்டான கேப்டன் டோணி

ஹாட்டான கேப்டன் டோணி

டெஸ்ட் போட்டிகளில் ஜாம்பவானாக விளங்கிய இந்திய அணி, ஐபிஎல் போட்டிகள் வருகையால் டெஸ்ட் ஆட்ட திறமையை இழந்துவிட்டதா, என்ற நிருபர்களின் கேள்விக்கு "ஐபிஎல் விளையாட்டை பார்த்து பொறாமை தேவையில்லையே" என்று மிஸ்டர் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோணி, பொறுமை இழந்து பதிலளித்தார்.

இத.. இத.. இதத்தான எதிர்பார்த்தீங்க...

இத.. இத.. இதத்தான எதிர்பார்த்தீங்க...

டோணியின் பதிலால் அதிருப்தியடைந்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, தனது டிவிட்டர் வலைத்தளத்தில் ஆத்திரத்தை கொட்டி தீர்த்துள்ளார். "ஐபிஎல் ரசிகர்களே, உங்களுக்கு வேண்டியதை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள். இந்தியாவின் டெஸ்ட் விளையாட்டு திறன் அழிவைத்தானே நீங்கள் விரும்பினீர்கள்" என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, August 18, 2014, 13:15 [IST]
Other articles published on Aug 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+