Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப வந்து இப்படி சொல்றீங்க.. காலையிலேயே சிஎஸ்கேவிற்கு சென்ற கெட்ட செய்தி.. தோனிக்கு பெரிய செக்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கும் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான கெட்ட செய்தி ஒன்று சென்றுள்ளது.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வரும் 18ம் தேதி இதற்கான மினி ஏலம் நடக்க உள்ளது. ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இன்னும் பல அணிகளுக்கு இடையே தொடர்ந்து டிரேடிங் நடந்து வருகிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று திட்டமிட்டு இருக்கும் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான கெட்ட செய்தி ஒன்று சென்றுள்ளது. அதன்படி 2021 ஐபிஎல் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்திற்கு பின் தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் ஆட மாட்டார்கள்.

 ஆட மாட்டார்கள்

ஆட மாட்டார்கள்

ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தென்னாபிரிக்கா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதனால் மே மாதம் முதல் வாரம் வரை தென்னாப்பிரிக்க வீரர்கள் முதல் இரண்டு வாரம் ஐபிஎல் போட்டிகளில் ஆட வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

சிஎஸ்கே

சிஎஸ்கே

முக்கியமாக சிஎஸ்கே அணியில் டு பிளசிஸ் ஆடுவதற்கு வாய்ப்பு இல்லை. லுங்கி நிகிடியும் சிஎஸ்கே அணியில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டரில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணியில் டு பிளசிஸ் ஓப்பனிங் அல்லது மிடில் ஆர்டரில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மோசம்

மோசம்

இதனால் டு பிளசிஸ் வரும் வரை சிஎஸ்கே அணி வேறு வீரர்களை வைத்து ஆட வேண்டும். பெரும்பாலும் டு பிளசிஸ் இடத்தில் சிஎஸ்கே அணிக்குள் ராபின் உத்தப்பா கொண்டு வரப்படுவார் என்று கூறுகிறார்கள். ராபின் உத்தப்பா ஓப்பனிங் இறங்க கூட அதிக வாய்ப்புகள் உள்ளது.

பின்னடைவு

பின்னடைவு

அதிலும் சென்னை அணிக்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டு பிளசிஸ் திரும்பி வந்து கொரோனா காரணமாக பயோ பபுளில் இணைய வேண்டும். இதனால் அவர் முதல் பாதியில் 5-6 ஆட்டங்களை இழக்க வாய்ப்பு உள்ளது.. தோனி இதற்கு தயாராக இருக்க வேண்டும்.

Story first published: Saturday, February 13, 2021, 11:05 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+