Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீர் ரிட்டயர்மெண்ட்.. ஷாக் தந்த சிஎஸ்கே ஜாம்பவான்.. ஐபிஎல்லுக்காக டு பிளசிஸ் முடிவு.. பின்னணி!

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

2021 ஐபிஎல் பீவர் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கான ஏலம் நாளை நடக்க உள்ளது.

சென்னையில் மினி ஏலம் நடக்க உள்ள நிலையில் 8 அணிகளின் நிர்வாகிகளும் சென்னை வந்துள்ளனர். பல வெளிநாட்டு வீரர்கள் இந்த ஏலத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இந்த தொடரில் சிஎஸ்கே அணி அதிகம் நம்பி இருக்கும் வெளிநாட்டு வீரர்களில் ஒருவர் டு பிளசிஸ். சென்னை அணியில் இவர் ஒன் டவுன் வீரராக களமிறங்கி வருகிறார். இந்த நிலையில் வரும் சீசனில் இவர்தான் கேம் சேஞ்சராக இருப்பார் என்று கருதப்படுகிறது.

சிஎஸ்கே

சிஎஸ்கே

சிஎஸ்கே அணி இவரை அதிகம் நம்பி உள்ளது. இந்த நிலையில் தற்போது டு பிளசிஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2012ல் இவர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். தற்போது இவருக்கு 36 வயதாகிறது.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் டு பிளசிஸ் ஆடி உள்ளார். இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். டி 20 போட்டிகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று இவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்த வருடம்

இந்த வருடம்

இந்த வருடமும், அடுத்த வருடமும் அடுத்தடுத்து டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது.இதில் தென்னாபிரிக்க அணியில் இடம்பெற டு பிளசிஸ் திட்டமிட்டுள்ளார். இதனால் இவர் ஐபிஎல் தொடரில் நன்றாக ஆட வேண்டும் என்று நினைக்கிறார்.

ஐபிஎல்

ஐபிஎல்

இதை எல்லாம் மனதில் வைத்து தற்போது டு பிளசிஸ் ஓய்வு பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆடினால் இந்த வயதில் காயம் ஏற்படும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார். முன்னதாக மொயின் அலி தற்போது நடக்கும் இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் .

ஓய்வு

ஓய்வு

ஐபிஎல்லை மனதில் வைத்து இவர் தொடரில் இருந்து வெளியேறினார். அதேபோல் ஐபிஎல்லுக்காக தென்னாப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். தற்போது டு பிளசிஸ் டி 20 போட்டிகள் மீதும் ஐபிஎல் மீதும் கவனமும் செலுத்த உள்ளார்.

Story first published: Wednesday, February 17, 2021, 11:47 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+