Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs NEP: “நீங்க கத்துக்குட்டி எல்லாம் இல்லை”.. மிரண்டுபோன ஸ்டெய்ன், அஸ்வின்.. நேபாளம் கெத்து

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக நேபாள அணி வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம் கிரிக்கெட் ஜாம்பவான்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நேபாள அணிக்கு எந்த நேரத்திலும் உதவத் தயாராக இருப்பதாகத் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற குரூப் சி லீக் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து நேபாளம் களமிறங்கியது. கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில், வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தப்பிப் பிழைத்தது. தோல்வியடைந்தாலும் நேபாள வீரர்களின் போராட்ட குணம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த அணியை கத்துக்குட்டி அணி என இனியும் சொல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ENG vs NEP Dale Steyn and Ravichandran Ashwin Praise Nepal s Performance Against England in T20 World Cup

டேல் ஸ்டெய்ன் ஓபன் ஆஃபர்

நேபாளத்தின் ஆட்டத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப்போன டேல் ஸ்டெய்ன் தனது எக்ஸ் தளத்தில், "நேபாளம் அணியே.. உங்களுக்கு எப்போதாவது எனது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் எப்போது வேண்டுமானாலும் உதவத் தயாராக இருக்கிறேன். மேன்மேலும் உயருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். ஒரு ஜாம்பவான் வீரர் தாமாக முன்வந்து ஒரு சிறிய அணிக்கு உதவிக் கரம் நீட்டியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின் பாராட்டு

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும் நேபாளத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். "நேபாளத்தின் ஆட்டம் நம்பமுடியாததாக இருந்தது. வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளில் நேபாளம் மிகச் சிறந்த அணிகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை" என்று அஸ்வின் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் பாம் போராட்டம்

185 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய நேபாள அணிக்கு லோகேஷ் பாம் கடைசி வரை நம்பிக்கையளித்தார். 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் விளாசிய அவர், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் கரன் துல்லியமாக யார்க்கர்களை வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால் நேபாளம் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது.

மைக்கேல் வாகன் கருத்து

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், "என்ன ஒரு அற்புதமான போட்டி.. நேபாள வீரர்கள் வெளிப்படுத்திய திறமை அபாரமானது," என்று பாராட்டியுள்ளார். வான்கடே மைதானத்தில் கூடியிருந்த சுமார் 17,000 ரசிகர்களும் நேபாள அணிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது அந்த அணிக்குக் கிடைத்த தார்மீக வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, February 8, 2026, 21:04 [IST]
Other articles published on Feb 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+