For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் கனவை சுக்கு நூறாக உடைத்த பாரிஸ்டோ.. இங்கிலாந்து அபார வெற்றி.. தொடரையும் சமன் செய்தது

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெரும்பாலான பகுதியில் ஆதிக்கம் செலுத்தியும், தோல்வியை தழுவியது.

5 போட்டிகள் கொண்ட் தொடரை இரு அணிகளும் தற்போது தலா 2 வெற்றிணு பெற்று தொடரை சமன் செய்தது.

டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியின் ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதம் விளாச, இந்திய அணி 416 ரன்கள் குவித்தது.

378 ரன்கள் இலக்கு

378 ரன்கள் இலக்கு

இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் பாரிஸ்டோ மட்டும் சதம் விளாச அந்த அணி 284 ரள்கள் மட்டுமே பெற்றது. 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில் இந்திய அணியில் புஜாரா, ரிஷப் பண்ட் மட்டும் அரைசதம் அடிக்க, 245 ரன்களில் சுருண்டது. இதனையடுதது 378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

ஜோ ரூட்

ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸ் 56 ரன்களும், ஷாக் கிராலி 46 ரன்களும் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 107 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜோ ரூட், பாரிஸ்டோ ஜோடி இணைந்து விளையாடினர்.

அபார வெற்றி

அபார வெற்றி

பாரிஸ்டோ 11 ரன்கள் எடுத்த நிலையில், விஹாரி ஒரு கேட்ச் வாய்ப்பை வீணடித்தார். இதனைத் தொடர்ந்து ஜோ ரூட், பாரிஸ்டோ ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினர். இதனால் இரவரும் அடுத்தடுத்து சதங்களை விளாசி அசத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 269 ரன்களை குவித்து, இந்திய அணியிடமிருந்த வெற்றியை இங்கிலாந்து அணி திருடி சென்றது.

இங்கிலாந்து சாதனை

இங்கிலாந்து சாதனை

இதன் மூலம் இந்திய அணி 350 ரன்களுக்கு மேல் 4வது இன்னிங்சில் விட்டு கொடுத்து முதல் முறையாக தோல்வியை தழுவியது. இதே போன்று. இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை 4வது இன்னிங்சில் வெற்றிக்கரமாக துரத்தி புதிய சாதனை படைத்தது. சுழற்பந்துவீச்சு சுத்தமாக எடுப்படாததே தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, July 5, 2022, 17:52 [IST]
Other articles published on Jul 5, 2022
English summary
England beat India by 7 wickets and series ends in drew இந்தியாவின கனவை சுக்கு நூறாக உடைத்த பாரிஸ்டோ.. இங்கிலாந்து அபார வெற்றி.. தொடரையும் சமன் செய்தது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+