Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க வீரர்களிடம் அப்படி டக்குனு சொல்ல முடியாது.. வேறவழியே இல்ல - புலம்பும் இங்கிலாந்து கோச்

சென்னை: ஐபிஎல் டி20 தொடருக்காக, இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாத சூழல் குறித்து விவாதம் எழுந்துள்ளது.

ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக எட்டு அணிகளும், தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை டிக் செய்து, ஏலத்தில் எடுக்க காத்திருக்கின்றன. விரும்பிய வீரர்களை எடுக்க மல்லுக்கட்டுவது, தேவையில்லை என்றாலும் ஏலத்தில் கைத்தூக்கி விலையை ஏற்றிவிட்டு மற்ற அணிகளின் பர்ஸை காலி செய்வது, சும்மா உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிடுவது என்று பல நுண்ணிய சித்து விளையாட்டுகள் இந்த ஏலத்தில் அரங்கேற காத்திருக்கின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது குறித்து, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட், சில முக்கியமான பாயிண்ட்களை தட்டி விட்டிருக்கிறார்.

 சுழற்சி முறை

சுழற்சி முறை

ஐபிஎல் 2021 தொடருக்கான அட்டவணை இதுவரை வெளியாகவில்லை என்றாலும், ஏப்ரல் இறுதியில் தொடங்கி, ஜூன் முதல் வாரம் வரை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் ஜூன் 2 முதல் 14 வரை இங்கிலாந்து - நியூஸி., அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இதனால், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சில முக்கிய வீரர்கள், ஐபிஎல்-ல் பங்கேற்பது காரணமாக விளையாட முடியாமல் போகலாம் என தெரிகிறது. அதாவது, இங்கி., அணியில் 'வீரர்கள் சுழற்சி முறை' கடைபிடிக்கப்படுகிறது. வீரர்களின் உடல்நலம், மனநலத்தை கருத்தில் கொண்டு, சில தொடர்களில் விளையாடும் வீரர்களுக்கு, அடுத்த சில தொடர்களில் ஓய்வு அளிக்கப்படும். அதன்படி, இந்த நியூஸி., தொடருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

 மிஸ்ஸாகும் சர்வதேச கிரிக்கெட்

மிஸ்ஸாகும் சர்வதேச கிரிக்கெட்

குறிப்பாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து trio பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆர்ச்சர் ஆகியோர் ஐபிஎல் தொடருக்காக நியூஸி., டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதேபோல், க்றிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும், அவர்களது அணி பிளே ஆஃப்-ல் நுழைந்தால் நியூஸி., தொடரில் ஆட முடியாமல் போகலாம்.

 தவிர்க்க முடியாதது

தவிர்க்க முடியாதது

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட், "நீங்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்று வீரர்களிடம் சொல்வது மிக மிகக் கடினம். ஐபிஎல் என்பது டி20 கிரிக்கெட்டில் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வு. ஆகவே, அவர்களிடம் அப்படி சொல்ல முடியாது. 'சர்வதேச கிரிக்கெட்டை புறக்கணித்து டி20 தொடரில் விளையாடுவதை' நான் நெகட்டிவாக பார்க்கவில்லை. அவர் எப்போதும் முழு ஆற்றலோடு டி20 விளையாடுகிறார்கள். இது நமக்கும் சாதகமாக இருக்கும்.

 சாதகமான அம்சம்

சாதகமான அம்சம்

சில முக்கிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியாமல் போகும் போது, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி புதிய வீரர்கள் விளையாடும் போது, அவர்கள் திறமை வெளிப்படுவதை காண நான் ஆவலுடன் உள்ளேன். ஐபிஎல் விவகாரத்தில், நமக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே நான் பார்க்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அனைத்து இங்கிலாந்து வீரர்களுக்கும் நான் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Story first published: Thursday, February 18, 2021, 13:28 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+