Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணியால் வந்த வினை.. ஜோப்ரா ஆர்ச்சர் 6 மாதம் அவுட்.. ஆஷல், உலக கோப்பைக்கும் கிடையாது

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது மீண்டும் காயம் காரணமாக ஆறு மாதம் காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

ஏற்கனவே கையில் ஏற்பட்ட காயத்தால் ஒரு ஆண்டுக்கு மேல் கிரிக்கெட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் பங்கேற்காமல் இருந்தார். அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் போட்டிக்கு திரும்பினார்.

England star Jofra archer ruled out from 6 months in international cricketer

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஜோப்ரா ஆர்ச்சர் வந்திருந்தார். காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத ஜோப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாட வைத்தது. இதனால் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. தன்னுடைய காயத்தின் தன்மை குறித்து மருத்துவரை அணுகுவதற்காக ஜோப்ரா ஆர்ச்சர் அண்மையில் பெல்ஜியம் சென்றிருந்தார்.

இதில் மீண்டும் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே இடத்தில் இரண்டு முறை காயம் ஏற்பட்டிருப்பதால் ஜோப்ரா ஆர்ச்சர் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடரில் ஜோப் ஆர்ச்சர் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்குகிறது.

England star Jofra archer ruled out from 6 months in international cricketer

வெறும் உலகக்கோப்பை போட்டியிலும் ஜோப்ரா ஆர்ச்சர் இருக்க மாட்டார் என தெரிகிறது. எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜோப்ரா ஆர்ச்சர்க்கு மீண்டும் மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், மீண்டும் அவர் முழு உடல் தகுதியுடன் விளையாட வேண்டும் என தாங்கள் விரும்புவதாகும் குறிப்பிட்டுள்ளது.

Story first published: Tuesday, May 16, 2023, 23:21 [IST]
Other articles published on May 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+