இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணி பிளேயிங் லெவன்.. பிசிசிஐ எடுத்த புதிய முடிவு
பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது.
2க்கு1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில், கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்றால் தொடரை சமன் செய்துவிடும்.
இதே போன்று இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியை சமன் செய்தாலே தொடரை வென்றுவிடலாம். இந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து தற்போது காணலாம்.

தொடக்க வீரர்கள்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, கொரோனா காரணமாக விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் விளையாட வில்லை என்றால், அதற்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்படுவார். இதனையடுத்து தொடக்க வீரராக புஜாரா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு தொடக்க வீரராக சுப்மான் கில் விளையாடுவார்.

நடுவரிசை
புஜாரா தொடக்க வீரராக புரோமோஷன் பெற்றதால், ஹனுமா விஹாரி 3வது இடத்தில் பேட்டிங் செய்தார். 4வது இடத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங் வரிசையில் இடம்பெறுவார். இதே போன்று பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்வரிசை
பேட்டிங் வரிசையில் 6வது வீரராக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று 7வது வரிசையில் ஆல்ரவுண்டர் சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா களம் காண இருக்கிறார். 8வது இடத்தில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் விளையாட இருக்கிறார். 9வது இடத்தில் முகமது ஷமியும், 10வது இடத்தில் பும்ராவும், 11வது இடத்தில் முகமது ஷிராஜியும் விளையாட உள்ளனர்.

பிளேயிங் லெவன்
1, புஜாரா, 2, சுப்மான் கில், 3,ஹனுமா விஹாரி. 4. விராட் கோலி , 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட். 7, ஜடேஜா, 8, ஷர்துல் தாக்கூர், 9, முகமது ஷமி 10, பும்ரா, 11, முகமது ஷிராஜ்


Click it and Unblock the Notifications