Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி போட்ட உத்தரவு.. "யாராவது ஒரு வீரர் செத்தே போய்விடுவார் என பயந்தேன்".. பகிர்ந்த டு பிளெசிஸ்

ஜோஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2018 டெஸ்ட் போட்டியில், விராட் கோலியின் கடுமையான கேப்டன்சி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளெசிஸ் உண்மை ஒன்றை உடைத்துள்ளார். பேட்டர்களின் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்கு ஆடுகளம் ஆபத்தானதாக இருந்த நிலையிலும், உடலில் எங்கு பந்து தாக்கினாலும் துளியும் வலியை வெளிக்காட்டக் கூடாது என்று இந்திய பேட்டர்களுக்கு கோலி போட்ட உத்தரவை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

யூடியூப் பாட்காஸ்ட் ஒன்றில் மனம் திறந்து பேசிய பாப் டு பிளெசிஸ், "அந்த வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டியை என்னால் மறக்கவே முடியாது. ஆடுகளம் மிகவும் ஆபத்தானதாக இருந்தது. பந்துகள் சீரற்ற முறையில் எழும்பி பேட்டர்களைத் தாக்கின. எங்கள் அணியின் தொடக்க வீரர் டீன் எல்கரின் தலையிலேயே பந்து பலமாகத் தாக்கியது. அந்த ஆடுகளத்தைப் பார்த்தபோது, இன்றைக்கு களத்தில் யாராவது ஒரு வீரர் செத்தே போய்விடுவார்கள் என்றே நான் உண்மையில் பயந்தேன். அந்த அளவுக்கு பந்து வேகமாக தொண்டையை நோக்கிப் பாய்ந்தது" என்றார்.

Faf du Plessis Recalls Virat Kohli s Fierce Directives During Dangerous Wanderers Test Match

அந்தப் போட்டியில் இந்திய அணி சற்று முன்னிலையில் இருந்ததை சுட்டிக்காட்டிய டு பிளெசிஸ், "போட்டியில் பின்தங்கியிருக்கும் அணி ஆட்டத்தைக் கைவிடச் சொல்லும். ஆனால் வெற்றிக்கு அருகில் இருந்த இந்திய அணியின் கேப்டன் கோலியோ ஆட்டத்தைத் தொடர்ந்து நடத்தவே விரும்பினார். அதனால் இந்திய பேட்டர்களிடம், 'பந்து உங்கள் கையிலோ, உடலிலோ, தலையிலோ அல்லது தொண்டையிலோ எங்கு பலமாகத் தாக்கினாலும் வலியைக் காட்டாதீர்கள். நீங்கள் வலியில் துடித்தால் ஆடுகளம் சரியில்லை எனக் கூறி ஆட்டத்தை நடுவர்கள் ரத்து செய்து விடுவார்கள்' என்று கோலி உத்தரவிட்டார்" என்று விவரித்தார்.

"திறமையால் வரவில்லை, இடஒதுக்கீட்டில் கேப்டன் ஆனார் என்று..".. டெம்பா பவுமாவை ஒப்பிட்ட கவாஸ்கர்

கோலியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து இந்திய வீரர்கள் உடலில் பலத்த அடிகளை வாங்கிய போதும் பொறுமையுடன் களத்தில் நின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த கேப்டனான விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வலிநடத்தி 40 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். வெறும் சொல்லால் மட்டுமின்றி தனது துணிச்சலான செயலால் அணியை வழிநடத்திய கோலியின் இந்த போர்க்குணமே அவரை இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உயர்த்தியது என டு பிளெசிஸ் பாராட்டினார்.

Also Read

"ஒரு பாகிஸ்தான் வீரருக்கு 24 லட்சம் கொடுத்தால்தான்".. நேபாளத்திடம் பணம் கேட்கும் பாக். போர்டு
Story first published: Monday, October 26, 2026, 17:00 [IST]
Other articles published on Oct 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+