Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராகுல் போல் நவீன் உல் ஹக்கின் கொண்டாட்டம்.. பூமர் ஆங்கிளாக மாறிய கவாஸ்கர்.. பதிலடி தந்த ரசிகர்கள்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் நவீன் உல் ஹக்கை , கோலி ரசிகர்கள் வச்சு செய்தனர். இதனால் கடுப்பான நவீன் உல் ஹக், தனது கோபத்தை பந்துவீச்சில் காட்டினார்.

எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியின் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கேமிரான் கீரின் ஆகியோரது விக்கெட்டுகளை சாய்த்து நவீன் உல் ஹக் அசத்தினார். நவீன் உல் ஹக் பந்து வீச வரும் போது எல்லாம், ரசிகர்கள் கோலி, கோலி என கத்தினர்.

Fans slams sunil gavaskar for his critics on naveen ul haq celebration

இதற்கு பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு தனது காதில் கை வைத்து அடைக்கும் ராகுல் ஸ்டைலை நவீன் உல் ஹக் செய்தார். இந்த நிலையில், கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சுனில் கவாஸ்கர், சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறி வந்தார்.

அதில் நவீன் உல் ஹக்கிற்கு பார்வையாளர்களிடம் பிரச்சனை இருப்பதாகவும், ஆனால் அதற்காக காதை விரல்கள் வைத்து பொத்தி கொள்வது தவறு என்று கவாஸ்கர் கூறியுள்ளார். நீங்கள் விக்கெட் எடுத்தால் மக்கள் உங்களை பாராட்டும் கைத்தட்டல்களை கேளுங்கள் , அதற்கு பதில் காதை மூடிக் கொள்ளாதீர்கள் என்றும் கவாஸ்கர் அறிவுரை வழங்கினார்.

இதே போன்று சதம் அடிக்கு வீரர்கள், காதை பொத்தி கொள்கிறார்கள். இது எந்த மாதிரி கொண்டாட்டம் என்றும் கவாஸ்கர் கேள்வி கேட்டுள்ளார். கவாஸ்கரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விசயமே தெரியாமல் எதோ பேச வேண்டும் என்று கவாஸ்கர் வர்ணணை செய்வதாக ரசிகர்கள் சாடியுள்ளனர்.

Story first published: Thursday, May 25, 2023, 21:08 [IST]
Other articles published on May 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+