Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

FIFA: நெதர்லாந்துக்கு அதிர்ச்சியளித்த ஜப்பான்.. விடாமுயற்சியால் உலகக் கோப்பையில் த்ரில்லர் டிரா

2026 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில், இருமுறை பின் தங்கியிருந்த ஜப்பான் அணி, தனது அசாத்திய போராட்ட குணத்தால் பலம் வாய்ந்த நெதர்லாந்துக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் த்ரில்லர் டிரா செய்துள்ளது.

விறுவிறுப்பான இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. ஆனால், இரண்டாவது பாதியில் ஆட்டம் முற்றிலும் சூடுபிடித்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் விர்ஜில் வான் டைக் தலையால் முட்டி ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். சர்வதேச அரங்கில் வான் டைக் அடிக்கும் முதல் முக்கிய கோல் இதுவாகும்.

FIFA World Cup 2026 Japan Stuns Netherlands with Thrilling Comeback Draw in World Cup Group F Clash

நெதர்லாந்தின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ஜப்பானின் கெய்டோ நகமுரா பந்தை லாவகமாக கோலாக மாற்றி 1-1 என சமநிலையை ஏற்படுத்தினார். தகேபுசா குபோ கொடுத்த பாஸை அவர் கோலாக மாற்றினார்.

இதன்பின் ஆக்ரோஷமாக ஆடிய நெதர்லாந்து அணி 64வது நிமிடத்தில் தனது 2வது கோலை அடித்தது. கிறிசென்சியோ சம்மர்வில் மைதானத்திற்கு வெளியிலிருந்து இடது காலால் உதைத்த பந்து மின்னல் வேகத்தில் கோல் போஸ்ட்டிற்குள் சென்றது. இதனால் நெதர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றது. இதனால் நெதர்லாந்து எளிதில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆட்டத்தை டிரா செய்ய ஜப்பான் பயிற்சியாளர் ஹாஜிமே மோரியாசு அதிரடியாக மாற்று வீரர்களைக் களம் இறக்கினார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஜப்பானுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கோகி ஒகாவா தலையால் முட்டிய பந்தை நெதர்லாந்து கோல்கீப்பர் தற்காக்க முயன்ற போதும், அருகில் நின்ற டெய்ச்சி காமடா அதை கோலாக மாற்றி ஜப்பான் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்தார்.

FIFA: ஒரு நியாயம் வேண்டாமா? குராசாவோவை கதறவிட்ட ஜெர்மனி.. 7 கோல் அடித்து உலகக் கோப்பையில் சாதனை

FIFA: ஒரு நியாயம் வேண்டாமா? குராசாவோவை கதறவிட்ட ஜெர்மனி.. 7 கோல் அடித்து உலகக் கோப்பையில் சாதனை

இறுதிவரை இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் போட்டி 2-2 என டிராவில் முடிந்தது. இருமுறை முன்னிலை பெற்றும் அதை தக்கவைக்க தவறிய நெதர்லாந்து அணிக்கு இந்த டிரா ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் இறுதிவரை போராடி ஆட்டத்தை டிரா செய்த ஜப்பான் அணிக்கு இது பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது.

Story first published: Monday, June 15, 2026, 7:58 [IST]
Other articles published on Jun 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+